பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

காட்டுமரம்


அறிவியல் பெயர் :

அல்பைசியா பால்கட்டேரியா

பொதுப்பண்பு :

  • அகன்ற அடிப்பகுதியை கொண்ட இம்மரம் வேகமாக வளரக்கூடிய பசுமை மாறா மரமாகும்.
  • இதன் மரம் மெல்லியது மற்றும் சாம்பல் நிறமுடையது.
  • பூக்கள் சிறியது மற்றும் விதையானது வெளிர் பச்சை நிறமாக காணப்படும்.

பரவல் :

  • இந்தியாவில் இம்மரம் அந்தமான், அஸ்ஸாம், கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

வாழிடம் :

இவை வெப்பமண்டல ஈர பசுமைமாறா காடுகளில் நன்கு வளர்கிறது.

மண் :

களிமண் மற்றும் இலகுவான மண்ணில் நன்கு வளர்கிறது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 - 1350 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1600 மி.மீ

வெப்பநிலை :

22 – 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • இதன் நாற்றுகள் நிழலில் நன்கு வளரக்கூடியது. எனவே இம்மரம் வேளாண் காடுகளுக்கு உகந்த மரமாகும். ஆனால் மலைப்பகுதிகளில் வரப்பு நடவிற்கு ஏற்றதல்ல.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

 

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • 5 – 10 வருடம் வளதுடைய மரத்திலிருந்து விதைகள் சேகரிக்கப்படுகிறது.
  • முதிர்ந்த நெற்றிலிருந்து விதைகள் பெறப்படுகிறது.
  • இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 45000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 70 சதவிகிதம் ஆகும்.
  • விதைகளை ஒரு வருடம் வரை சேமித்து வைக்கலாம்.

  • கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.

 

  • விதைகள் நேர்த்தி செய்யப்பட்டு தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • விதைகள் முளைக்க நிழல் அவசியம் என்பதனால் தாய்பாத்தியின் மேல் பந்தல் போன்ற மூடாக்கு அமைக்கப்படுகிறது.
  • 2 – 5 நாட்களில் விதை முளைத்துவிடும்.
  • இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றுகள் நாற்றங்காலில் இருந்து பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • 4 – 5 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • ஜுலை மாதத்;தில் நடவு பணிகள் மேற்கொள்வது சிறந்ததாகும்.
  • வறண்ட நிலப்பகுதியில் குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது  3 x 3 மீ என இருக்க வேண்டும்.      

  • நடவு செய்யப்படும் நிலப்பகுதி களைகளற்றதாகவும், நீர் தேங்காத வண்ணம் இருத்தல் வேண்டும்.

  • 20 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3200 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் மரப்பெட்டிகள் தயாரிக்கவும், உள்கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் பயன்படுகிறது.
  • மற்ற மரக்கூழ் மரங்களுடன் சேர்த்து மரக்கூழ் மற்றும் காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
  • இம்மரம் ஒட்டுப்பலகை தயாரிக்க பயன்படுகிறது.

 

-->