பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

அலிஞ்சி மரம்.


அறிவியல் பெயர் :

அலாஜ்ஜியம் சால்விபோலியம்

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது மற்றும் செறசெறப்பானது.
  • இளம் கிளைகள் இளஞ்சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் பச்சை நிறமுடையது.
  • இருபால் மலர்களை கொண்டது. மலர்கள் ஆரஞ்சு நிறமுடையது.
  • இதன் காய் பெர்ரி வகையை சேர்ந்தது. காய் நீள நிறமுடையது.
  • விதைகள் கொலகொலப்பான திரவத்தில் மூடியவண்ணம் காணப்படும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

வாழிடம் :

நீர் ஓடும் பகுதியை ஒட்டிய காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5 - 6 வளரக்கூடியது

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

800-1000 மி.மீ

வெப்பநிலை :

20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மிதமான சரிவுள்ள நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரும் தனமையுடையது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட விதைகள் நிழலில் உலர்த்தப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • விதைகள் குறைந்த நாட்கள் மட்டுமே முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் நேரடியாக பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது. பாலித்தீன் பைகளில் வளர் இடுபொருட்களான செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய கலவை 1:1:1 அல்லது 2:1:1 என்ற விகிதத்தில் நிரப்பப்படுகிறது.
  • அதிக களிமண் இல்லாதவாறு வளர் இடுபொருட்களை நிறப்ப வேண்டும்.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய
  • பாலித்தீன் பையில் 2 விதைகள் என நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் நாற்றங்காலிலிருந்து வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஈரமான பகுதிகளுக்கு குழியின் அளவு 30 செ.மீ3மற்றும் வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
    6 – 12 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீர்ப்பாசனம் :

நாற்றின் நல்ல வளர்ச்சிக்கும், அவற்றின் உயிரை தக்கவைதுக் கொல்லும் பொருட்டு கன்று நட்டவுடன் ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் விடுவது அவசியம். வறண்ட நிலப்பகுதிக்கு இம்முறை ஏற்றதாகும். நல்ல ஈரமான மண்ணிற்கு தண்ணீர் விடுவது அவசியம் இல்லை. நல்ல மண் வளமும், நீர் வளமும் கொண்ட பகுதியில் நல்ல மகசூழ் கிடைக்கிறது.

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் இசைக்கருவிகள் தயாரிக்கவும் மற்றும் மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • இம்மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்காகவும், கைபிடிகள், துப்பாக்கி மருந்து தயாரிக்கவும், உள்கட்டிட கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும்
  • கைவினைபொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
    இம்மர வேர்கள் பாரம்பரியமாகவே தோல் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் சிறிய குச்சிகள் பல் துளக்க பயன்படுகிறது.

இதன் மரப்பட்டை அலங்கார பயன்பாட்டுக்கு உதவுகிறது.

  • இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம்.

  • -->