பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

காயா மரம்


அறிவியல் பெயர் :

காயா செனிகாலென்சிஸ்

பொதுப்பண்பு :

  • 15 - 30 மீ உயரம் வரை வளரக்கூடிய பெரிய பசுமை மாறா மரமாகும்.
  • மரமானது அடர் சாம்பல் நிறமுடையது.
  • இலையானது வெளிர் பச்சை நிறமுடையது.
  • விதையானது மேல்நோக்கியிருக்கும் மற்றும் வட்டமானது. விதைகள் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • அதிக மழைப்பொழிவுள்ள பகுதிகளில் அதிகம் வளர்கிறது. எம்மரமும் வளராத இடங்களில்கூட இம்மரம் வளரக்கூடியது.

வாழிடம் :

ஆற்றுபடுகையை ஒட்ட காடுகளில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1800மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

400 – 1750 மி.மீ

வெப்பநிலை :

24 - 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

வளரியல்பு :

பகுதி இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • வேர் கிழங்குகள் மூலம் இனப்பெருக்கமடைகிறது.

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

 

  • விதையானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் 1 – 2 நாட்களுக்கு உலர்த்தப்படப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதைகள் காற்றுபுகாவண்ணம் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 1500 - 2000 விதைகள் இருக்கும்.
  • விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் ஒரு வருடம் வரை சேமித்து வைக்கலாம்.

 

  • குளிர் நீரில் 24 - 48 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

 

  • வளர் இடுபொருட்கள் அடங்கிய 10 x 1 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் விதையானது நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • இம்முறையான விதைப்பு பிப்ரவரி – மார்ச் கால இடைவெளியில் செய்வது நாற்று உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும்.
  • மாதமான நாற்றானது நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  •  

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்ட முதல் மாதத்திற்கு பின் களைகள் எடுப்பது அவசியமாகும்.
  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்வது நாற்று நன்கு வளர துணை புரிகிறது.

  • 30 - 40 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 1800 – 2000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும், விலையுயர்ந்த மரச்சாமான்கள் தயாரிக்கவும், கைபிடிகள் தயாரிக்கவும், கதவு, ஜன்னல் தயாரிக்வும் மற்றும் சிற்பங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • விறகிற்காகவும் மற்றும் கரி உற்பத்திக்காகவும் இம்மரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • பழங்காலத்திலிருந்தே இதன் பட்டை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.