பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

செண்பகம்


அறிவியல் பெயர் :

மைகிலியா சம்பகா

பொதுப்பண்பு :

  • மிதமான அளவு முதல் பெரிய அளவிலான, இலையுதிர் மரமாகும். அகன்ற கிளைகளையுடையது.

பரவல் :

  • இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும்.

வாழிடம் :

வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது.

மண் :

ஈரமான, ஆழமான, வளமான மண்ணில் நன்கு வளருகின்றன.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

200 – 2400மீ

மலையளவு :

500 – 1500மி.மீ

வெப்பநிலை :

7-38 செல்சியஸ்

நிலப்பரப்பு :

மலைப்பகுதி மற்றும் புல்வெளி போன்ற இடங்களில் வளருகின்றன.

மரப்பண்பு :

  • ஒளி விரும்பி, நெருப்பை தாங்கி வளராது.

  • மறு தாம்புக்கு நன்கு தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:    

 

  • இம்முறையில் குறைந்தளவு வெற்றியே கிடைக்கிறது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:     

 

  • விதையானது ஆகஸ்ட் - செப்டம்பர் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 10000 - 29500 விதைகள் இருக்கும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
  • அறை வெப்பநிலையில் 7 மாதங்கள் வரை விதைகளை சேகரிக்கலாம்.

 

விதை நேர்த்தி:

 

  • தேவையில்லை.

 

நாற்றாங்கால் தொழில் நுட்பம்:

 

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • 15 – 20 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • ஒரு வருடமான நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.

 

  • இது ஒரு அலங்கார தாவரம் என்பதால் குறிப்பிட்ட வடிவமுமையதாக மாற்ற கிளைகளை அகற்றுவது முக்கியமாகும்.

 

முக்கிய பயன்கள் :

  • பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனைதிரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதன் மரம் மிகச்சிறந்த எரிபொருளாகும். ஒரு கிலோ மரத்தில் 2070 கிலோ கலோரி வெப்பத்தை தரவல்லது.
  • சுமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். எனவே கோவில் காடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
  • இலைகள் à®ªà®Ÿà¯à®Ÿà¯à®ªà¯‚ச்சி à®µà®³à®°à¯à®ªà¯à®ªà¯à®•à¯à®•à¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
  • அலங்கார à®®à®°à®®à®¾à®• – à®šà®¾à®²à¯ˆà®¯à¯‹à®°à®™à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯ à®•à¯‹à®¯à®¿à®²à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯ à®µà®³à®°à¯à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.