பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பலா மரம்


அறிவியல் பெயர் :

அர்டோகார்பஸ் ஹெட்டிரோபில்லஸ்

பொதுப்பண்பு :

  • இது ஒரு பெரிய பசுமை மாறா மரமாகும்.
  • மலப்பட்டையானது அடர் சாம்பல் நிறத்திலிருக்கும்.
  • இலைகளானது அடுத்தடுத்து அமைந்தியுக்கும் மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
  • ஒருபால் மலர்களையுடையது. பெரியதாக காணப்படும்.
  • கனியானது பெரியது. 10 – 30 கிலோ எடையுடையது.
  • மஞ்சள் நிற சதைப்பகுதி சாம்பல் நிற விதைகளை சுற்றி காணப்படும்.

பலா வகைகள் :

  • வெளிபலா, சிங்கப்பூர், ஹைபிரிடு ஜாக், பன்ருட்டி, தஞ்சாவூர் ஜாக், பரலியாறு 1, பி.எல்.ஆர் 1, பி.எல்.ஆர் (ஜே) 2, மற்றும் பி.பி.ஐ 1 போன்றவை பலா மரங்களில் வேறுபட்ட வகைகளாகும்.

 

பரவல் :

  • இம்மரம் இந்தியா மற்றும் மலேசிய பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

வாழிடம் :

எல்லா நாடுகளிலும் வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடியது.

மண் :

செம்மண், செம்மண் கலந்த வண்டல் மண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1600 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 – 2400 மி.மீ

வெப்பநிலை :

16 – 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த பழத்திலிருந்து விதைகள் எடுக்கப்படுகிறது.
  • நிழலில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • இதன் விகைள் எண்ணெய் வகையை சேர்ந்தது என்பதால் குறைந்த நாட்களே முளைப்புத்திறன் கொண்டிருக்கும்.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 45 - 90 விதைகள் இருக்கும்.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளின் முளைப்புத்திறனானது 70 – 75 சதவிகிதமாகும்.

  • தேவையில்லை

  • நாற்றானது நேரடியாக பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
  • இவ்வகை உற்பத்திக்கு பெரிய பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்கதுவங்குகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • குழியில் 10 கிலோ எரு மற்றும் 1 கிலோ வேப்பம்பிண்ணாக்கு சேர்க்கப்படுகிறது.
  • கட்டுரக நாற்றுகள் ஜுன் - டிசம்பர் மாத கால கட்டத்தில் 8 x 8 மீ இடையெளியில் நடப்படுகிறது.
  • நாற்று நடவிற்கு ஜுலை மாதம் ஏற்றதாகும். இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
  • மரம் வளர்ந்து காய்க்க துவங்கியதும் மரங்களுக்கிடையேயான இடைவெளி 12 x 12 மீ என இருக்க வேண்டும்.

  • இறந்த கிளைகளை மரத்திலிருந்து நீக்க வேண்டும். இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரம் என்பதால் மரங்களுக்கிடையேயான இடைவெளி அதிகப்படியாக இருக்க வேண்டும்.

  • ஒட்டுரக மரங்கள் 5 வது வருடத்திலிருந்து காய்க்க துவங்குகிறது. விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளில் 8 வது வருடம் முதல் காய்க்க துவங்குகிறது.

  • மார்ச் முதல் ஜுலை கால இடைவெளியில் அறுவடை செய்யப்படுகிறது

ஊடுபயிர் சாகுபடி :

  • பயறு வகைப் பயிர்களையும், காய்கறிகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இதன் பழம் உணவாக பயன்படுகிறது.
  • இதன் மரம் சிறிய ரக வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • காப்பி தோட்டங்களில் நிழலுக்காக இம்மரம் பயிரிடப்படுகிறது.
  • மிளகு வளர்ப்பிற்கு இம்மரம் பயன்படுகிறது.

மருத்துவ பயன்

  • வேர் காயம் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், ஆஸ்துமா போன்றவற்ளை குணப்படுத்த வல்லது.
  • இதனை கலந்து பாம்பு விஷமுறிவிற்கும் பயன்படுத்தலாம்.

கோந்து

  • 71.8% ரெசின் கிடைக்கப்பெறும்.
  • இவை வார்னிஸ்கலக்கப் பயன்படும்.

-->