பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

முருங்க மரம்


அறிவியல் பெயர் :

மொரிங்கா ஒலிபெரா

பொதுப்பண்பு :

  • 10 மீ உயரம் வரை வளரக்கூடிய சிறிய அலையுதிர் மரமாகும். இம்மரம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் உயிர்பிழைத்திருக்கும்.
  • கிளைகள் கோணலாக காணப்படும். குறிப்பாக இதன் கிளைகள் கீழ் நோக்கி வளர்ந்திருக்கும்.
  • மரப்பட்டை தடிமனானது மற்றும் எளிதில் உடையக்கூடியது.
  • பூக்கள் வெண்மையானது.
  • நெற்றானது நீண்டது மற்றும் பச்சை நிறமுடையது. நெற்றினுள் எண்ணற்ற விதைகள் இருக்கும்.

பரவல் :

  • இம்மரம் இமய மலைப்பகுதிகளை தாயகமாக கொண்டது. ஆனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலம் வளர்க்கப்படுகிறது. இம்மரம் வீட்டு தோட்டங்களில் உணவிற்காக அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் ஈர மண்ணில் பரவலாக வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

24 - 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 – 2250 மி.மீ

வெப்பநிலை :

24 - 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • அதிக ஒளி விரும்பி மரமாகுமு;.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மேஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் நெற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • விதைகள் காற்றுபுகாவண்ணம் பாலித்தீன் பையில் சேகரித்து வைக்கப்படுகிறது.
  • விதைகள் குறைந்தளவு முளைப்புத்திறனை கொண்டது. எனவே அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க இயலாது.
  • ஒரு கிலோ விதையில் 8000 - 9000 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 60 – 70 சதிவிகிதமாகும்.

  • குளிர் நீரில் 12 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் தாய்பாத்தியில் ஜுன் மாதத்தில் விதைக்கப்பட வேண்டும். இம்மர விதைப்பிற்கு பொதுவாக பள்ள பாத்தி பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு சதுர மீட்டர் தாய்பாத்திக்கு 30 – 35 கிராம் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.
  • தாய்பாத்திக்கு அவ்வப்போது பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 8 – 10 நாட்களில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • விதைக்கப்படும் பொழுது விதைகளுக்கிடையேயான இடைவெளி 10 செ.மீ உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • நாற்றங்காலில் வளரும் களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும்.
  • ஒரு வருடமான ஒட்டு முறை நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நேரடி விதைப்பு :

  • விதைகள் நேரடியாக நிலத்தில் 5 மீ இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும்

நாற்றுகள் நடவு முறை :

  • ஜுலைஆகஸ்டு மாத இடைவெளியில் நாற்றுகள் நடப்பட வேண்டும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

தண்டு ஒட்டு நாற்றுகள் நடவு :

  • ஒரு வருடமான மரங்களிலிலிருந்து தண்டுகள் எடுக்கப்பட்டு ஒட்டு நாற்றுகள் பெறப்படுகிறது.
  • ஒட்டு நாற்று நடவானது ஜுலைஆகஸ்ட் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.

தண்டுகள் நடவு :

  • நன்கு வளர்ந்த ஆரோக்கியமான மரத்திலிருந்து 2 – 3 மீ நீளமுள்ள தண்டு நடவிற்காக வெட்டியெடுக்கப்பட வேண்டும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இம்முறையே இந்தியாவின் பல பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. இம்முறையில் நாற்று உற்பத்தி திறன் சாற்று அதிகமாகவே இருக்கும்.

  • நாற்று நடப்பட்ட பகுதியை சுற்றி களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

  • வருடத்திற்கு இரு முறை பூத்து காய்க்கவல்லது.
  • மார்ச் - ஏப்ரல் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாத இடைவெளியில் பூத்து காய்க்கவல்லது.

முக்கிய பயன்கள் :

  • இதன் இலைகள் கேரட்டை விட அதிகளவிலான வைட்டமின் - ஏ மற்றும் வைட்டமின் - சி நிறைந்ததாகும்.
  • இதன் காய் உணவிற்காக பயன்படுத்தப்படுகிறது. முருங்கை காய் உறுகாய் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் காய், பூ மற்றும் இலை உணவாக பயன்படுத்தப்படுகிறது.
  • இம்மரம் ஒரு சிறந்த கால்நடை தீவனமாகும்.