பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

ரப்பர் மரம்.


அறிவியல் பெயர் :

பைகஸ் எலாஸ்டிகா

பொதுப்பண்பு :

  • பெரிய பசுமை மாறா மரமாகும்.
  • இதன் அகன்ற பெரிய கிளைகள் விழுதுகள் மூலம் மண்ணில் ஊண்றி நிற்கிறது.
  • இதன் பெரிய அகன்ற இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
  • காய்கள் சிறியது மற்றும் மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

சுண்ணாம்பு நிறைந்த மலைப்பகுதி மற்றும் மலை வனப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

நீர் தேங்காத தன்மை கொண்ட அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5-8.3

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1650 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

300 – 2800 மி.மீ

வெப்பநிலை :

15 - 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • மெதுவாக வளரக்கூடிய நிழல் விரும்பும் மரமாகும்.
  • தீ, பனி மற்றும் நீர் தேங்கியிருக்கும் மண்ணினை தாங்கி வளரும் தன்மையற்றது.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • விதைகளின் மேலுறை நீக்கப்படுகிறது.
  • மேலுறை நீக்கப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • விதைகளை 3 மாதங்கள் வரை சேமிக்கலாம்.
  • விதை முளைப்புத்திறன் 20 – 50 சதிவிகிதமாகும்.

  • விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுள்ள தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 3 – 4 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 3 வாரத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைகளை விதைக்கலாம். வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் விதைகள் விதைப்பு நடைபெறுகிறது.
  • நாற்றுகள் நிழலில் வைக்கப்படுகிறது.
  • நாற்றுகளுக்கு அவ்வப்போது பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
  • உவர்நிலம் மற்றும் களிமண் நிலங்களுக்கு குழியின் அளவு 60 x 60 x 80 செ.மீ அல்லது 60 x 60 x 120 செ.மீ என இருக்க வேண்டும்.

  • 1 முதல் 2 வருடங்கள் வரை நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
  • நீர் பாய்ச்சுவதன் மூலம் புதிய இலைகள் மற்றும் கிளைகள் துளிர்விடுகின்றன.
  • வட்டப்பாத்தியில் அவ்வப்போது நீர் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

நீர்ப்பாசனம் :

  • வேகமான மரங்கள் வளர முதல் இரண்டு வருடங்கள் நீர்ப்பாசனம் அவசியம்.

முக்கிய பயன்கள் :

  • இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால் ரப்பர் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • பால் டயர் தயாரிக்க மற்றும் இதர ரப்பர் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • காலனிகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள் தயாரிக்க பயன்படுகிறது.

  • இதன் மரப்பட்டையிலிருந்து பெறப்படும் மரப்பால் டயர், இரப்பர் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

-->