பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பூவரச மரம்


அறிவியல் பெயர் :

தெஸ்பீசியா பாபுல்னியா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய அகன்ற கிளைகளுடன் வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் இதய வடிவமுடையது மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் மணி போன்ற வடிவமுடையது. பூக்கள் மஞ்சல் நிறமுடையது. இதன் மத்தியில் சிவப்பு நிறம் இருக்கும்.
  • காய்கள் கேப்சியூல் வகையை சேர்ந்தது. காயினுள் 1 – 3 விதைகளிருக்கும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவக்காணப்படுகிறது.

 

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

இம்மரம் கடற்கரையோர மணலிலும், எரிமலை பகுதி மண், சுண்ணாம்பு கலந்த மண் மற்றும் பாறை மண்ணில் நன்கு வளரும்.

மண் pH :

5.5 மற்றும் 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 - 1900 மி.மீ

வெப்பநிலை :

35 - 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வேகமாக வளரும் மரமாகும்.
  • உப்பு மண்ணிலும் தாங்கி வளரும் தன்மையுடையது.
  • இம்மரம் நீர் தேங்கியிருக்கும் மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடை;யது.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • ஒவ்வொரு நெற்றிலும் 3 – 10 விதைகளிருக்கும்.
  • ஒரு கிலோ விதையில் 1800 - 2000 விதைகளிருக்கும்.

  • கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் விதைகள் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்று தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • விதை முளைப்புத்திறன் 50 – 75 சதவிகிதமாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

  • அவ்வப்போது பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • களையெடுத்தல் மற்றும் மண் உழுதல் மிக அவசியமாகும்.
  • நீர் ஆவியாதலை தவிர்க்க மரத்தை சுற்றி இறந்த இலை தழைகளை இட்டு மூடாக்கு அமைக்க வேண்டும். இதன் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம்.

  • 10 – 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3000 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் கடலோர பகுதிகளில் காற்று தடுப்பு மரமாக நடப்படுகிறது.
  • இம்மரம் நீரில் முழ்கியிருப்பினும் அதிக வலிமையுடையது. எனவே கப்பல் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இம்மரபட்டையிலிருந்து நார்கள் பெறப்படுகிறது. இந்நார்கள் மீன் வலைகள் அமைக்க மற்றும் காப்பி பைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது.

விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.  இந்த எண்ணெய் விளக்கேற்ற பயன்படுகிறது.  மரப்பட்டை நார்கள் மீன்வலை செய்யவும், காபி பைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

வேளாண் காடு வளர்ப்பு பயன்கள்:

மணல் மற்றும் உப்புத்தன்மை மண்ணிலும் வளரக்கூடியது.  காற்று மற்றும் உப்புத் தன்மையை தாங்கி வளர்வதால் இவை கடலோரப் பகுதிகளில் காற்றுத் தடையாக வளர்க்கப்படுகிறது.

 

-->