பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

இலவங்க மரம்.


அறிவியல் பெயர் :

சின்னமம் சைலானிக்கம்

பொதுப்பண்பு :

  • இலவங்க மரம் ஒரு பசுமை மாறா மரமாகும்.
    பட்டை எடுக்கப்படாத மரம் 30 – 10 செ.மீ சுற்றளவு கொண்டது.
  • இளம் இலைகள் பளபளப்பான இளஞ்சிவப்பு நிறமுடையது. முதிர்ந்தபின் பச்சை நிறமாக மாற்றமடைகிறது.
  • பூக்கள் சிறியது, மணமானது மற்றும் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
  • காய்கள் டுரூப் வகையை சேர்ந்தது. கனிந்தபின் கருப்பு நிறமாக மாற்றமடைகிறது.

பரவல் :

  • இலவங்க மரம் இலங்கையை தாயகமாக கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

வாழிடம் :

பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

அனைத்து மண்ணிலும் வளரும் தன்மையுடையது.

மண் pH :

4.5 – 7 வரை

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

2000 – 2500மி.மீ

வெப்பநிலை :

13 - 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைபாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • மெதுவாக வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • இயற்கை விதைகள் மூலம் வளர்வது குறைவு.

  • ஒட்டு நாற்று உற்பத்தி மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • காய்கள் மே – ஜுன் மாத இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட காய்கள் 2 – 3 நாட்கள் நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • காயின் மேற்தோல் நீக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது.

  • தேவையில்லை.

  • விதைகள் நேரடியாக பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • இரண்டு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • நடவிற்கு முன் குழியினுள் மேல்மண் மற்றும் எரு அடங்கிய கலவை 10 கிராம் சேர்க்கப்படுகிறது.
  • இடைவெளியானது 6 மீ என இருக்க வேண்டும்.
  • குழிக்கு 50 கிராம் அசோஸ்பைரில்லம் நடவிற்கு முன் சேர்க்கப்படுகிறது.

  • நாற்றுகளுக்கு நிழல் அமைப்பது முக்கியமாகும்.
  • நடப்பட்ட நாற்றுகள் அடிப்பகுதியில் இறந்த இலை தழைகளை இட்டு மூட வேண்டும்
  • வட்டப்பாத்தி அமைக்கப்பட்ட பகுதியை சுற்றி களைகளை நீக்க வேண்டும்.
  • இளம் மரமாக இருக்கும் பொழுது பண்ணையில் வழைமரங்களை நிழலுக்காக பயிரிடலாம்.
  • ஊடுபயிர் பயிரிட முடியாத நிலையில் மூடாக்கு அமைத்து நிழலை ஏற்ப்படுத்தலாம்.
  • கோடை காலங்களில் நீர்பாய்ச்ச வேண்டும்.
  • கோடை பருவங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் 8 லிட்டர் தண்ணீர்
  • பாய்ச்சுவது மிக முக்கியமானதாகும். சொட்டுநீப் பாசனம் மூலமும் நீர்பாய்ச்சலாம்.

  • 6 வருடமான மரம் பூக்கத்துவங்குகிறது.
  • இதன் பூ மொட்டு மலர்வதற்கு முன் முதிர்ந்த பின் அறுவடை செய்யப்படுகிறது.
  • பரிக்கப்பட்ட மொட்டுகள் 5 – 7 நாட்கள் வரை சூரிய வெயிலில் காய வைக்கப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • இதன் பட்டை உணவில் மணத்திற்காக சேர்க்கப்படுகிறது.
  • இதன் இலை எண்ணெய் மணத்திற்காக சேர்க்கப்படுகிறது.
  • பட்டை காப்பியிலும் மணத்திற்காக சேர்க்கப்படுகிறது.
  • இதன் பட்டை மற்றும் பூ பல் வலிக்கு மருந்தாக பயன்படுகிறது.