பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மல்பெரி


அறிவியல் பெயர் :

மோரஸ் ஆல்பா

பொதுப்பண்பு :

  • இது சராசரி அளவுடைய வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
  • மரப்பட்டை அடர் சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் அகன்றது மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
  • மலர்கள் வெள்ளை நிறம் கொண்டது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்டது.

வாழிடம் :

வெப்பமண்டல பகுதிகளில் வளரும் மரமாகும்.

மண் :

செம்மண், மணற்பாங்கான செம்மண், இரும்பொறை மண், சரளை மண், களிமண், களிமண்கூடிய அடைநிலம், மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும். மண்ணில் ஈரப்பதம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

மண் pH :

6.0 – 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

800 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

600 – 2500 மி.மீ

வெப்பநிலை :

25 – 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • நிழலை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • உடல இனப்பெருக்கம் மூலம் நாற்றுகள் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

  • பழுத்த கனியானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • கனியை சுற்றியுள்ள சதை பகுதி நீக்கப்பட வேண்டும்.
  • ஒரு கிலோ விதையில் 400000 – 450000 விதைகளிருக்கும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 35 – 90 சதிவிகிதமாகும்.
  • நாற்று முளைப்புத்திறன் 56 – 96 சதவிகிதமாகும்.

  • காப்பர் கலக்கப்பட்ட குளிர் நீரில் ஒரு வாரம் ஊர வைக்கப்படுகிறது.

உடல இனப்பெருக்க நேர்த்தி

  • 40 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ அசோஸ் ஸ்பைரில்லம் சேர்த்த கலக்கப்படுகிறது.
  • தண்டு பதியன் பேடுவதற்கு முன் இக்கலவையில் 30 நிமிடம் அதன் அடிப்பகுதியை வைக்க வேண்டும்.
  • அசோஸ்பைரில்லம் வேர் வளர ஊக்குவிக்கிறது.

தாய்பாத்தியை தயார் செய்தல்

  • ஒரு ஹெக்டர் பண்ணைக்கு 800 சதுர மீட்டர் பகுதி நாற்று உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • தாய்பாத்தியானது வண்டல் மண் கலந்த செம்மண்ணாக இருக்க வேண்டும்.
  • தாய்பாத்திக்கு உரமிட ஒரு குறிப்பிட்ட அளவு எரு அவசியமாகும்.
  • நாற்றங்கால் உற்பத்திக்கு மேட்டுப்பாத்தி பயன்படுத்தப்படுகிறது.
  • நாற்றங்கால் அளவு உற்பத்தி செய்யப்படும் நிலத்தின் தன்மை கொண்டு மாறுபடுகிறது.
  • நாற்றங்காலை தண்ணீர் வசதி கொண்ட இடத்தில் அமைக்க வேண்டும்.

நாற்று உற்பத்தி :

  • நாற்றங்காலில் சதுர மீட்டருக்கு 100 கிராம் வேம் சேர்க்க வேண்டும்.
  • தாய்பாத்தி தினமும் நீர்பாய்ச்சப்படுகிறது.
  • தண்டு உற்பத்தி முறையில் 45 டிகிரி சாய்வில் 15 7 செ.மீ இடைவெளியில் தண்டனது பதியன் போடப்படுகிறது.
  • ஒவ்வொரு தண்டிற்கும் ஒரு கணு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • நாற்று பதியன் போடப்பட்டதிலிருந்து 90 - 120 நாட்களில் மறுநடவிற்கு தயாராகின்றது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது 75 அல்லது 105 x 90 செ.மீ இடைவெளியில் நடப்படுகிறது.
  • இவ்விடைவெளிகளில் ஊடு பயிர்கள் பயிரிடப்படுகிறது.
  • வரப்பு நடவிற்கு நீர்பாய்ச்சும் பண்ணைக்கு இடைவெளியானது 60 x 60 செ.மீ மற்றும் 90 x 90 செ.மீ  இருக்க வேண்டும்.
  • குழி முறைக்கு 90 x 90 செ.மீ இடைவெளி பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு ஹெக்டர் பண்ணைக்கு 27780 (60 x 60 செ.மீ இடைவெளிக்கு), 12345 (90 x 90 செ.மீ) நாற்றுகள் பயன்படுத்தப்படுகிறது.

 

நடவு காலம் :

 

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • பனி மற்றும் கோடை காலங்களில் நடவு பணி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 

வாய்க்கால் மூலம் பண்ணையம்

  • இது ஒரு சிறந்த முறையாகும்.
  • இம்முறைக்கு குறைவான நீர் போதுமானது.
  • வாய்கால்கள் மழை பருவங்களில் நீரை வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது.

பாத்தி முறை மூலம் பண்ணையம்

  • செவ்வக வடிவ பாத்திகள் அமைக்கப்படுகிறது.
  • மண் அரிமானம் இம்முறையில் குறைவாக இருக்கும்.
  • பாத்தி பரப்பளவு அதிகமென்பதால் பராமரிப்பு பணிக்கு அதிக ஆட்கள் தேவைப்படும்.
  • இம்முறையில் பாரம்பரிய நீர்பாய்ச்சு முறையை காட்டிலும் சற்று குறைவான நீரே தேவைப்படும்.
  • இம்முறை அதிக உற்பத்தியை தரக்கூடியது.
  • சமமான நிலப்பரப்பு இம்முறைக்கு ஏற்றதாகும்.
  • நீர்பாய்ச்சும்போது உரமும் சேர்த்து இடப்படுகிறது.
  • முதலில் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும்.

பாரம்பரியமுறை மூலம் பண்ணையம்

  • நிலம் நடவிற்கு தயார் செய்யும்பொழுது வேர்கள் மற்றும் களைகள் நீக்கப்படுகிறது.
  •  
  • நன்கு மட்கிய தொழு உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  •  
  • பண்ணை கருவிகள் அமைத்தையும் முறையாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

இயந்திர முறை மூலம் பண்ணையம்

  • கவாத்து செய்த பின் கால்நடை கொண்டு கலப்பை உழவ செய்யப்படவேண்டும்.
  • களைகள் கைகளினால் நீக்க வேண்டும்.

கவாத்து முறைகள் :

அடிப்பகுதி கவாத்து செய்தல் :

  • நிலத்திலிருந்து 10 – 15 செ.மீ உயரம் வரை பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • வருடம் ஒரு முறை கவாத்து செய்தல் அவசியம்.

நடுப்பகுதி கவாத்து செய்தல் :

  • இம்முறையில் நிலத்திலிருந்து 45 – 60 செ.மீ உயரம் வரை பக்க கிளைகளை நீக்க வேண்டும்.

அறுவடை முறைகள் :

  • பட்டுபுழு உற்பத்தி முறையை பொறுத்து இலைகள் அறுவடை செய்யப்படுகிறது.
  • காலை நேரங்களில் இலைகளை அறுவடை செய்வது சிறந்ததாகும்.
  • இலைகளை மூன்று முறைகளில் அறுவடை செய்யலாம்.

இலைகளை பறித்தல் :

  • தனித்தனி இலையாக பறிக்கப்படுகிறது. முளைகுறுத்தின்றி இலைகளை சேகரிக்க வேண்டும்.
  • அடிப்பகுதி கவாத்து செய்ததிலிருந்து 10 நாட்களில் இலைகளை பறிக்கலாம்.
  • அடுத்த பறிப்பு 7 – 8 வாரங்களில் மேற்கொள்ளலாம்.

கிளையாக வெட்டுதல் :

  • கிளைகள் முழுமையாக வெட்டப்படுகிறது.
  • முதிராத மேல் இலைகளை அகற்றிவிட வேண்டும். கிளையில் இலைகள் அனைத்தும் முதிர்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

முழு செடி அறுவடை :

  • நிலப்பகுதியிலிருந்து முழு செடியும் அறுவடை செய்யப்படுகிறது.
  • 10 – 12 வார இடைவெளியில் இவ்வகை அறுவடை மேற்கொள்ளப்படுகிறது.
  • ஒரு வருடத்திற்கு 5 – 6 அறுவடைகள் செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • தேராயமாக ஒரு டன் மரம் 1200 – 1500 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் பலவகை பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரம் விளையாட்டு துறையில் உபகரணங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இளம் இலைகள் பட்டு புழு உற்பத்திக்கு பயன்படுகின்றது.
  • இதன் குச்சிகள் கூடைகள் தயாரிக்க பயன்படுகிறது.

நார்:

  • மரத்தில் இருந்து பெறப்படும் சல்பேட் கூழ் எழுது மற்றும் அச்சு காகிதங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
  • பட்டையில் இருந்து பெறப்படும் கூழ் மற்றும் நார் ஆடை தொழிலில் பயன்படுகிறது.

எரிபொருள்:

  • கலோரி மதிப்பு 4370 – 4770 கி.கலோரி /கி.கி.

தீவனம்: 

  • இலைகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது.

 

-->