பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

குமிழ்


அறிவியல் பெயர் :

மெலினா அர்போரியா

பொதுப்பண்பு :

  • இது ஒரு இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
  • இலையானது வெளிர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் பச்சை கலந்த வெளிர் நிறமாகவும் காணப்படும். இம்மரம் வெண்ணிற தோல் போத்திய கருமையான விதையை கொண்டது.
  • விதையின் அளவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.
  • பூக்கள் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • கனியானது டுரூப் வகையை சேர்ந்தது.
  • ஒவ்வொரு கனியும் 2 - 3 விதைகளை கொண்டது.

பரவல் :

  • இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளர்கிறது.

வாழிடம் :

இம்மரம் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

இவை வண்டல் மண் கலந்த செம்மண்ணில் அதிகம் வளர்கிறது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200மீ வரை வளரும்

மலையளவு :

750மி.மீ -2500மி.மீ

வெப்பநிலை :

30 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது அதிக ஒளி விரும்பி மரமாகும்.
  • பனியை மற்றும் வறட்சியை தாங்கக் கூடியவை.
  • மறுதாம்பு மூலம் நன்றாக தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • இயற்கையாகவே விதைகள் மூலம் முளைக்கக்கூடியது மற்றும் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூயது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • முதிர்ந்த விதைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சுத்தம் செய்யப்பட்டு உலர்த்தப்பட்ட அறையில் விதையானது 24 மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
  • சுத்தம் செய்யப்பட்ட விதையின் மேற்தோலானது நீக்கப்படுகிறது.
  • காப்பி விதைஉறை நீக்கி கொண்டு அதிகப்படியான விதைகள் சுத்தம் செய்யப்படுகிறது.
  • சுத்தம் செய்யும் முன் தண்ணீரில் 24 மணி நேரம் ஊர வைப்பதால் சுத்தம் செய்தல் எளிதாகிறது.
  • சுத்தம் செய்யப்பட்ட விதைகள் தட்டுகளில் கொட்டி உலர்த்தப்படுகிறது.
  • ஊலர்த்தப்பட்ட விதைகள் வெயிலில் காய வைக்கப்படுகிறது.

 

விதை நேர்த்தி:

 

  • குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

  • நாற்றானது விதைகள் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • விதையானது ரூட் டிரெயினரில் நேரடியாகவும் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட விதையானது 0.5 செ.மீ மணல் கொண்டு மூடப்படுகிறது.
  • விதையானது தூவுதல் முறை மூலம் தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தியானது ஒரு நாளைக்கு இரு முறை பூவாளி கொண்டு  நீர் இறைக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 1500 – 2000 விதைகள் இருக்கும்.
  • மரத்திற்கு மரம் விதையின் அளவு மற்றும் எடை மாறிக்கொண்டே இருக்கும்.
  • விதையானது விதைத்தவுடன்  விரைவாக வளரும் தன்மை கொண்டது.
  • தாய்பாத்தி முழுதும் சூரிய ஒளி படுமாறு இருத்தல் அவசியம்.
  • ஒரு குறிப்பிட்ட உயரம் வளர்ந்தவுடன் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • 4 மாதங்களான நாற்றுகள் நடவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
  • மரக்கூழ் தயாரிப்பிற்கு நடப்படும் மரத்திற்கான இடைவெளியானது 2 x 2 மீ என இருக்க வேண்டும்.

 

கவாத்து செய்தல் :

 

  • கவாத்து செய்தல் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
  • கவாத்து செய்வதால் மரம் நேராகவும் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கவும் செய்கிறது.
  • 6 மாதத்திற்கு ஒரு முறை கவாத்து செய்வது இன்றியமையாதது ஆகும்.
  • கவாத்து செய்யப்பட்ட கிளைகளை விறகிற்காக பயன்படுத்தலாம்.

 

மரங்களை அகற்றுதல் :

 

  • மரங்களை அகற்றுதல் மிகவும் முக்கியமாகும். மரம் வளர வளர மரங்களுக்கிடையோன இடைவெளி குறைகின்றது.
  • 4 – 5 வருடங்களான மரத்திற்கிடையோன இடைவெளியை அதிகரிக்க வேண்டும்.
  • வரிசையில் அடுத்தடுத்த மரங்கள் ஒரு குறிபிட்ட வருட இடைவெளியில் நீக்கப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் தோராயமாக 7000 – 8000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

  • குமிழ் மரம் தமிழ்நாட்டில் வேளாண் காடுகளுக்கு அதிகமாக பயிரிடப்படுகிறது.
  • குமிழ் மரத்துடன் நிலக்கடலை, தர்பூசணி, பயிர்கள், மக்காச்சோளம் மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது.
  • தமிழகத்தில் புதுகோட்டை மாவட்டத்தில் பல்பயிர் சாகுபடி குமிழ் மரத்தை கொண்டு செய்யப்படுகிறது.
  • குமிழ், தென்னை, வாழை மற்றும் மிளகு சேர்த்து செய்யப்படும் சாகுபடியும் நல்ல விளைச்சளை தரவல்லது.

முக்கிய பயன்கள் :

  • இம்மரமானது இதன் மரம் மற்றும் மருத்துவ பயன் காரணமாக அதிகமாக பயிரிடப்படுகிறது.
  • இம்மரமானது அதிக மகசூலை தருவதால் விவசாயிகள் இதனை அதிகம் விரும்பி பயிரிடுகின்றனர்.
  • இம்மரம் மரக்கூழ் தயாரிக்க, ஒட்டுப்பலகை தயாரிக்க, தீக்குச்சி தயாரிக்க, சிற்பங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், பட்டு உற்பத்திக்கும் பயன்படுகிறது.
  • இம்மரம் நிழலுக்காக காப்பி மற்றும் கொக்கோ தோட்டங்களில் பயரிடப்படுகிறது.

நார்:

  • இதன் கட்டையிலிருந்து சிறந்த கூழ் கிடைக்கும்.
  • இவை தரம் குறைந்த காகிதங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

மருத்துவப் பயன்கள்:

  • மரப்பட்டை, இலைகள், வேர்கள் ஆல்கலாய்டுகளை கொண்டுள்ளன.
  • இவை இந்து மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
  • பழம் மற்றும் மரப்பட்டையில் உள்ள மருத்துவ குணம் காய்ச்சலை குணப்படுத்துகிறது.

-->