பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

காட்டு இலந்தை மரம்


அறிவியல் பெயர் :

ஜிஜுபஸ் நுமுலேரியா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
  • இலைகள் வட்ட வடிவமுடையது மற்றும் சிறியது.
  • பூக்கள் சிறியது மற்றும் பால் போன்ற வெண்மை நிறமுடையது.
  • காய்கள் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்திhவின் வறண்ட பகுதிகளில் அதிகம் வளர்கின்றது.

வாழிடம் :

வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. களிமண்ணில் வளரும் தன்மையற்றது.

மண் pH :

5.5 -7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1700 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

100 – 1000 மி.மீ

வெப்பநிலை :

15 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காயானது ஜுன்ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட காயானது நிழலில் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 3300 - 5000 விதைகளிருக்கும்.
  • விதைகள் குறைந்த நாட்களுக்கே முளைப்புத்திறன் கொண்டது.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • அதிகப்படியான களிமண் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • விதைகள் தரம் பிரிக்கப்பட்டு, பெரிய விதைகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளில் பைக்கு 2 விதைகள் வீதம் விதைக்கப்படுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்ட பிறகு பைக்கு ஒரு நாற்றுகளை பிடுங்கி மற்றொரு பாலித்தீன் பையில் நடப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • வறண்ட பகுதிகளில் குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும். ஈர பகுதிகளில் குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • 6 – 12 மாதங்களான நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்படும் பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும். பழங்களுக்காக வளர்க்கப்படும் பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 10 x 10 மீ அல்லது 12 x 12 மீ என இருக்க வேண்டும்.

  • பிப்ரவரிமார்ச் மாத இடைவெளியில் மரத்தின் கிளைகளை நீக்க வேண்டும்.
  • கிளைகளை நீக்குவதால் முளைக்கும் புதிய கிகைள் நல்ல கனிகளை தரும்.
  • இம்மரத்தின் நல்ல வளர்ச்சிக்கு நடப்பட்ட இரண்டு வருடங்களுக்கு களையெடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.

  • நடப்பட்ட 2 வருடங்களிலிருந்து காய்க்க துவங்குகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு கிலோ காய் 100 – 120 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.
  • ஒரு டன் மரம் 2600 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

  • இதன் பழுத்த மற்றும் காய்ந்த காய்கள் உணவுப்பொருளாக பயன்படுகிறது.
  • இதன் வேர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
  • இதன் இலைகள் டசார் வகை பட்டு புழு வளர்ப்பிற்கு பயன்படுகிறது.
  • மரம் கட்டுமான பணிகளுக்கும், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், கோல்ப் மட்டைகள் தயாரிக்கவும் மற்றும் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.