பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

கரும் பொரசு, பொரசு, முதிரை, புருஷ்


அறிவியல் பெயர் :

குளோரோசைலான் ஸ்வீட்டீனியா

பொதுப்பண்பு :

  • சிறிதிலிருந்து நடுத்தர அளவுடைய இலையுதிர் மரம், சிறிய மற்றும் வளைந்த தண்டுடன் பறந்து விரிந்த மரக்கூரைப் பகுதியுடையது. 
  • அடிமரம் 3 மீட்டர் அளவும், 1.5மீட்டர் சுற்றளவுடனும் காணப்படுகிறது.
  • அதிகபட்ச அளவாக இலங்கையில் 2.7மீ சுற்றளவை எட்டியுள்ளது.

பரவல் :

பீகார், இந்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வறண்ட இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது.

வாழிடம் :

ஈரப்பதமுடைய இலையுதிர் காடுகள்.

மண் :

ஆழமற்ற மண்.

மண் pH :

6.5 - 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

450 மீ வரை

மலையளவு :

1250 - 1500மி.மீ.

வெப்பநிலை :

35 செல்சியஸ் - 47.5 செல்சியஸ்

நிலப்பரப்பு :

சமவெளிப்பகுதி / மலைப்பகுதி

மரப்பண்பு :

பனியை தாங்கி வளராது.  மறுதாம்பு வளரும் தன்மை உடையது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மிதமான வளர்ச்சி

உயரம் :

15 மீட்டர்

இயற்கை மறு உருவாக்கம்:

மழைக்காலங்களில் விதை முளைப்பு நடைபெறுகிறது.

செயற்கை மறு உருவாக்கம்:

விதை, மரக்கன்று, பக்கக்கன்றுகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

இனப்பெருக்கம்

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

கனிகள் வெடித்த பின் விதை சேகரிப்பு செய்யலாம்.  கனிகள் சூரிய ஒளியில் நன்கு வெடிக்கும் வரை உலர்த்தப்படுகிறது.  விதைகள் சணல் பை அல்லது மூடிய தகர பெட்டியில் சேமிக்கப்படுகிறது. 

முளைப்புத்திறன்: 69%    

மரப்பண்ணை தொழில்நுட்பம்:

  • கடும்வெயில் மற்றும் மழைப்பொழிவில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நிழல் உள்ள பாத்தியில் ஜுன் - ஜுலையில் விதைக்கப்படுகிறது.
  • விதைகள் சிறிது மணல்கொண்டு மூடப்படுகிறது.  விதை முளைப்பு இரண்டு வாரங்களில் ஆரம்பித்து இரண்டு மாதங்களில் முடிவடைகிறது.  பூவாலி கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் குறைந்த அளவு நீர் தெளிக்கப்படுகிறது.  களையெடுத்தல் அவசியம்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நடவு தொழில்நுட்பம்:

நேரடி விதைப்பு:

  • 3 மீட்டர் இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • மரக்கன்றுகள் நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
  • களை எடுக்காமல் விதைப்பது முழுவதுமாக பயிர் சேதத்தை ஏற்படுத்தும்.

அடிமரத்துண்டு நடவு:

ஒரு வருட மரத்தண்டுகள் பயன்படுத்தப்படுகிறது.  தண்டுகள் 12செ.மீ - 18செ.மீ விட்டம் உடையதாகவும், 4செ.மீ நீளம் உடையதாகவும், 23-30செ.மீ வேர் நீளம் உடையதாகவும் இருக்க வேண்டும்.

பூச்சி மற்றும் நோய்:

  • மரங்கள் காட்டுத்தீயால் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகிறது. 
  • புழு மரக்கட்டையை துளைத்தும், வண்டுகள் உயிருள்ள தண்டுகளை துளைத்தும், தண்டு துளைப்பான்கள் தண்டுகளை துளைத்தும், மற்ற பூச்சிகள் சாறுருஞ்சியாகவும் மற்றும் இலைகளை உண்டும் சேதப்படுத்துகின்றன.

முக்கிய பயன்கள் :

  • மேசை, நாற்காலிகள் செய்யப்பயன்படும் வழவழப்பான மரவகை, பொன்நிறமான பிரகாசமான மரக்கட்டை.
  • சிறிய ஆடம்பர பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.
  • மரக்கட்டை பதப்படுத்தும் போது, சிறிது வெடிப்புகள் ஏற்படுகிறது.
  • நிலைத்து வாழக்கூடிய தன்மை உடையது.
  • பாலம், வீட்டுக்கட்டுமானம், விவசாய உபகரணங்கள், ஆரங்கள், கணைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது.