பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மட்டிப்பல் மரம்


அறிவியல் பெயர் :

அய்லாந்தஸ் டிரைபைசா

பொதுப்பண்பு :

  • இது ஒரு பெரிய அழகிய இலையுதிர் மரமாகும்.
  • இம்மரத்தின் அடிப்பகுதி பருத்து தடிமனாக காணப்படும்.
  • பூக்கள் அவண்மையானது.
  • மரம் பழுப்பு நிறமுடையது.
  • காய்கள் சிவப்பு நிறமுடையது.

பரவல் :

  • இவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், இந்திய-மலேசிய பகுதிகளிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

இவை கொதுவாக வெப்பமண்டல பசுமை மாறா காடுகள் காணப்படுகிறது.

மண் :

இவை நீர் தேங்காத தன்மை கொண்ட மற்றும் ஆழமான தன்மையுள்ள களிமண்கூடிய அடைநிலம் மற்றும் இறுகிய அல்லது இலகுவான மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

60 - 1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1500 – 2000 மி.மீ

வெப்பநிலை :

27 – 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.
  • நீர் தேங்கியிருக்குமேயானால் மகரந்தசேர்க்கை பாதிக்கப்படுகிறது.

வளரியல்பு :

இது ஒரு பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • இவை விதைகள் மூலம் இனப்பெருக்கமடையக்கூடியது.

 

செயற்கை மறு உருவாக்கம்: 

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
  • நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் 3 மாதங்கள் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைக்கலாம்.
  • விதை முளைப்புத்திறன் 50 – 70 மற்றும் 40 - 60 சதவிகிதம் ஆகும்.

 

விதை நேர்த்தி

 

  • தேவையில்லை

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

  • தாய்பாத்தியானது நீர் தேங்காத தன்மை கொண்ட மணல் வகை மண்ணினால் அமைக்கப்பட வேண்டும்.
  • தாய்பாத்தியை சற்று மேடான பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.
  • நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் 20 செ.மீ அடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • விதைகள் விரைவில் முளைக்க அதிகப்படியான ஆழத்தில் விதைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். 5.மி.மீ ஆழத்தில் விதைப்பது சிறந்ததாகும்.
  • மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் விதைப்பட வேண்டும்.
  • தாய்பாத்தியை பூவாளி கொண்டு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 – 20 நாட்களில் விதைகள் முளைத்துவிடுகின்றன.
  • 2 – 3 இலைகள் துளிர்ந்த பிறகு வளர் இடுகொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • ஜுலைஅக்டோபர் மாதகால இடைவெளியில் நடவுபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • தொகுப்பு நடவிற்கு 6 – 10 மாதமான நாற்றுகள் 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளியில் நடப்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்பாய்ச்சுதல் மிக அவசியம். நாற்றுகளை கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிமானதாகும்.

 

பாராமரிப்பு :

 

  • முதலாம் ஆண்டில் மூன்று முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
  • இரண்டாம் ஆண்டில் இரண்டு முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.

 

நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு :

 

  • இலையுண்ணிகளான அடிவா பேப்ரிசெல்லா மற்றும் எலிக்மா நர்சிசஸ் தாக்குதல் அதிகமாக இளம்பருவத்தில் இருக்கும்.
  • எலிக்மா நர்சிஸ் தாக்குதலை கட்டுப்படுத்த 0.05 சதவிகித மோனோகுரோட்டோபாஸ் தெளிக்க வேண்டும்.

 

  • இம்மரம் 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 7000 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

காய்கறிகள், மிளகு மற்றும் பயறு வகைகளை ஊடுபயிராக பயரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் ஒட்டுப்பலகை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • மரங்கள் தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு பணன்படுத்தப்படுகிறது.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

மர வேலைபாடுகள் செய்ய சுலபமாக இருக்கும்.

பூச்சி தாக்குதலுக்கு சுலபமாக உட்படும்.

கட்டுமரம் தயாரிக்கவும், மரபெட்டிகள் தயாரிக்கவும் பயன்படும்.

பிளைவுட் தயாரிக்கவும் பயன்படுகிறது.

இலைகள் தீவனமாகவும் பயன்படுகிறது.

-->