பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

சீமை அகத்தி


அறிவியல் பெயர் :

கிளைரிசிடியா செபியம்

பொதுப்பண்பு :

 • இம்மரம் 10 மீ உயரம் அல்லது 20 – 30 செ.மீ சுற்றளவு வரை வளரக்கூடியது.
 • இது ஒரு இலையுதிர் மரமாகும்.
 • அடுத்தடுத்து அமைந்த பச்சைந நிற இலைகளை கொண்டது. இலைகளின் நுனியானது கூர்மையாக அல்லாமல் வட்டமாக காணப்படும்.
 • நெற்றுகள் இளமையில் மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது. விதைகள் முதிர்ந்தபின் கருமை நிறமாக மாற்றமடைகிறது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். தற்பொழுது இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

4.5-6.2

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750 - 1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1200 – 2000 மி.மீ

வெப்பநிலை :

24 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக பெருக்கமடையக்கூடியது.

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
 • விதைகள் நெற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
 • விதைகள் 3 வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துகொள்ளும் தன்மையுடையது.
 • ஒரு கிலோ விதையில் 3700 விதைகளை கொண்டது.
 • விதை முளைப்புத்திறன் 75 – 80 சதிவிகிதமாகும்.

 • கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.
 • குளிர் நீரில் 24 மணிநேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யலாம்.

 • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைப்பு ஏப்ரல் - மே மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 3 – 4 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
 • தாய்பாத்தியை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
 • நாற்றுகள் இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
 • விதைகளை நேரடியாக வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பையிலும் விதைக்கலாம்.
 • நாற்றுகளுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
 • உப்பு தன்மையுள்ள நிலங்கள் மற்றும் களிமண்ணில் 60 x 60 x 80 செ.மீ அல்லது 60 x 60 x 120 செ.மீ அளவுள்ள குழி பயன்படுத்தப்படுகிறது.
 • விறகிற்காக வளர்க்கப்படும் பண்ணைக்கு மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 2 x 2 மீ என இருக்க வேண்டும்.

 • களையெடுத்தல் மற்றும் உழுதல் அவசியமாகும்.
 • கால்நடைகள் நாற்றுகளை சேதப்படுத்தாத வண்ணம் வேலி அமைத்தல் வேண்டும்.

 • 7 - 10 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர் சாகுபடி :

 • இம்மரம் நிழலுக்காக சாலையோரங்கள், கொக்கோ மற்றும் காப்பி தோட்டங்களில் நடப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

 • இம்மரம் நிழலுக்காக சாலையோரங்கள், கொக்கோ மற்றும் காப்பி தோட்டங்களில் நடப்படுகிறது.
 • காற்றுதடுப்பான் மற்றும் வரப்போரங்களில் பாதுகாப்பிற்காக இம்மரம் நட பயன்படுகிறது.
 • மண் அரிமானத்தை தடுக்க இம்மரம் விளைநிலங்களின் வரப்போரங்களில் நடப்படுகிறது.
 • இதன் இலைகள் பசுந்தாழ் உரமாக வளர்க்கப்படுகிறது. இம்மரம் வருடத்திற்கு 500 கிலோ இலைகளை தரவல்லது.
 • ஊடுபயிர் வளர்ப்பிற்கு இம்மரம் ஏற்றதாகும்.
 • வறண்ட பகுதிகளிலும் இம்மரம் வளரக்கூடியது. எனவே வறண்ட பகுதிகளில் நடுவதற்கு இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.
 • இம்மரம் சாலையோரங்கள் மற்றும் பூங்காக்களில் பயிரிட பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ பயன்கள்:

 • இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருள் பாக்டீரியத்திற்கு எதிராகப் பயன்படும். 
 • மேலும் இருமல், அரிப்பு, காய்ச்சல், தலைவலி, தோல் புற்றுநோய், வயிற்றுப்புண், காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது.

-->