பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

நாகலிங்க மரம்.


அறிவியல் பெயர் :

கவ்ரேபிட்டா குயினென்சிஸ்

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும். இதன் சராசரி உயரம் 8 – 30 மீ மற்றும் இதன் மரத்தின் சுற்றளவு 30 – 50 செ.மீ ஆகும்.
 • இதன் மலர்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது மற்றும் மணம் கமலக்கூடியது.
 • மலர்கள் மரத்தின் தண்டுப்பகுதியில் பூக்கவல்லது.
 • காய்கள் அகன்றது மற்றும் கடினமான வட்டவடிவமுடையது. காய்கள் குழுமமாக காய்கவல்லது.
 • இம்மலரின் மத்தியில் நாகமானது சிவலிங்கத்தை சுற்றியிருப்பது போன்ற தோற்றத்தை கொண்டிருப்பது அதன் சிறப்பம்சமாகும். பூஜைகளுக்காக இதன் மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. மலர்கள் மணம் கமலக்கூடியது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

500 மீ குறைவான கடல்மட்ட உயரம் கொண்ட நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.

மண் :

நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது. பொதுவாக வறண்ட மண்ணில் நன்கு வளரக்கூடியது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 1500 மி.மீ

வெப்பநிலை :

12 - 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
 • உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.

 • கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.

 • விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
 • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
 • 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
 • அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

 • நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

 • இதன் மணம் கமலக்கூடிய மலர்கள் வாசனை திரியங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
 • இதன் காய் உண்ணப்பயன்படுகிறது.
 • இதன் மரம் பொம்மைகள் தயாரிக்க, பெட்டிகள் தயாரிக்க மற்றும் மர உபயோகப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
 • அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.