பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

செந்நங்கி


அறிவியல் பெயர் :

லகர்ஸ்டிரோமியா பார்விபுளோரா

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய சிறிய இலையுதிர் மரம்.
 • மரப்பட்டை அடர் சாம்பல் நிறமுடையது.
 • மலர்கள் மணமானது மற்றும் வெண்மையானது.
 • காய்கள் கேப்சியூல் வகையை சேர்ந்தது. ஒவ்வொரு காயினுள்ளும் 20 – 30 விதைகளிருக்கும். விதைகள் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

 

 • இம்மரம் இந்தியாவின் வறண்ட பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.

 

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது. வறண்ட மற்றும் கலப்புக்காடுகளில் வளரும்.

மண் :

நீர் தேங்காத தன்மை கொண்ட மணல் மற்றும் களி மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

5.5 – 6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1500 – 3500மி.மீ

வெப்பநிலை :

24 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • பனி மற்றும் நிழலை தாங்கி வளரும் தன்மையற்றது.
 • மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

 • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

 • ஒட்டு நாற்று உற்பத்தி முறை மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த காய்கள் பிப்ரவரி மாதத்தில் சேகரிக்கப்படுகிறது.
 • காய்கள் வெயிலில் காய வைக்கப்படுகிறது. விதைகள் தனியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.
 • விதைகளை காற்று புகாத பாலித்தீன் பையில் இறுக கட்டி வைக்க வேண்டும். இவ்விதைகளை ஒரு வருடம் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேமித்து வைக்கலாம்.
 • ஒரு கிலோ விதையில் 28000 - 56000 விதைகளிருக்கும்.
 • இவ்விதைகளின் விதை முளைப்புத்திறன் மிகவும் குறைவாகும்.
 • விதைகளின் விதை முளைப்புத்திறன் 2 – 3 சதிவிகிதமாகும்.

 • குளிர் நீரில் 48 மணிநேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.

 • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது ஏப்ரல் - மே மாத இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
 • தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 2 நாட்களில் விதைகள் முளைத்துவிடுகின்றன. 3 மாதத்தில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
 • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றானது வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.
 • நாற்றங்காலில் ஒரு வருடம் வரை நாற்றுகளை பராமரிக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • மழை பருவ காலத்தில் நடவுபணி மேற்கொள்ளப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

 • நாற்றுகள் இளம் பருவமாக இருக்கும்பொழுது அவ்வப்போது களையெடுத்தல் அவசியமாகும்.
 • இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மரங்களை வெட்ட வேண்டும்.

 • 25 - 30 வருடங்கள்

முக்கிய பயன்கள் :

 • இம்மரம் ஓரளவு கடினமானது மற்றும் எளிதாக அறுக்கக்கூடியது.
 • இம்மரம் கட்டுமான பணிகளுக்கு, உள் அலங்கார பணிகளுக்கு, கதவு, ஜன்னல்கள் தயாரிக்க, வேளாண் உபகரணங்கள் தயாரிக்க, படகு மற்றும் மரச்சமான்கள் தயாரிக்க பயன்படுகிறது.
 • இம்மரம் ஒரு மிகச்சிறந்த எரிபொருளாகும். எனவே விறகு மற்றும் கரி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
 • மரப்பட்டையானது டானின் மற்றும் நார் எடுக்க பயன்படுகிறது.