பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சில வாகை மரம்.


அறிவியல் பெயர் :

போஸ்வாலியா செரேட்டா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய பெரிய குறுகிய கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
  • பூக்கள் சிறியது மற்றும் வெண்மையானது.
  • காய்கள் முக்கோன வடிவமுடையது மற்றும் டுரூப் வகையை சேர்ந்தது. விதைகள் இறகு போன்ற வடிவமுடையது.

பரவல் :

  • இந்தியா முழுவதும் இம்மரம் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5.5-6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1150 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 2000 மி.மீ

வெப்பநிலை :

47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
  • மறுதாம்பு மறை மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த விதையானது மேஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிராம் விதையில் 14 - 15 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 40 – 48 சதிவிகிதமாகும்.
  • நாற்று உற்பத்தி திறன் 19 சதவிகிதமாகும்.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் மட்டுமே விதைப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

  • நாற்றுகள் பாலித்தீன் பைகளில் நேரடியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ஒவ்வொரு பாலித்தீன் பைக்கும் 2 – 3 விதைகள் என விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 6 நாட்களில் விதைகள் விதைக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • களையெடுத்தல் மற்றும் அவ்வப்போது மண்ணை உழுதல் அவசியமாகும்.

 

  • 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர் சாகுபடி :

  • பயறு வகைப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் மர பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. குறிப்பாக பொட்டிகள், மேஜை மற்றும் நாற்காலி தயாரிக்க, படகு தயாரிக்க தேவையான பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.