பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

ஆல மரம்


அறிவியல் பெயர் :

பைகஸ் பெங்காலென்சிஸ்

பொதுப்பண்பு :

 • பரந்த கிளைகளையுடைய பசுமை மாறா அல்லது இலையுதிர் மரமாகும். இடத்திற்கேற்றவாது இம்மரத்தின் தோற்றமிருக்கும்.’
 • இவற்றின் கிளைகளிலிருந்து வேர்கள் தேன்றுகின்றன.
 • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது. மரம் மென்மையானது. இதன் வயதான பட்டைகள் உதிர்ந்து விழக்கூடியது.
 • இலைகள் அடுத்தடுத்து அமைந்து காணப்படும். சுருள் வடிவில் அமைந்திருக்கும். இலைகள் அடர் பச்சை நிறமுடையது.

பரவல் :

 

 • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

 

வாழிடம் :

இம்மரம் அனைத்து வகையான காடுகளிலும் வளரும் தன்மையுடையது. இம்மரம் மற்ற மரங்களின் மீது வளர்ந்து பெரிதாகும் தன்மையுடையது. கொதுவாக இம்மரம் சமவெளி மற்றும் மேட்டுப்பகுதிகளில் வளர்கிறது.

மண் :

நீர் தேங்காத தன்மை கொண்ட ஆழமான வண்டல் கலந்த செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5.5 – 6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 5000 மி.மீ

வெப்பநிலை :

16 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • ஒட்டு நாற்று உற்பத்தி மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
 • பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
 • காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.

 • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.

 • தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
 • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
 • விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
 • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
 • நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
 • நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில்
 • நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
 • வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 5 – 10 மீ என இருக்க வேண்டும்.
 • மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 • அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

கால்நடை தீவனம் :

 • இம்மரத்தின் இலைகள் யானை, ஒட்டகம், ஆடு மற்றும் கால்நடைகளுக்கு ஒரு மிகச்சிறந்த தீவனமாகும்.
 • இலைகளில் 10 – 14 சதவிகித புரோட்டீன் உள்ளது. இவை எளிதாக மெல்லக்கூடியதாகவும், செரிமானமடையக்கூடியதாகவும் உள்ளதால் விலங்குகள் இதனை விரும்பி உண்ணுகின்றன.

மரம் :

 • இம்மரம் ஓரளவு வலிமையானதாகும்.
 • இம்மரம் பெட்டிகள் தயாரிக்க, மலிவான பலகைகள்  தயாரிக்க, கரண்டி தயாரிக்க மற்றும் மரகிண்ணம் தயாரிக்க பயன்படுகிறது.

படிகப்பொருள் / சாயப்பொருள் மரப்பட்டை உதவுகிறது.

-->