பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பரம்பை மரம்


அறிவியல் பெயர் :

அகேசியா பெருஜினியா

பொதுப்பண்பு :

  • குறைந்த உயரம் மட்டுமே வளரக்கூடிய இலையுதிர் மரம்.
  • பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
  • விதையானது தட்டையான வட்ட வடிவமுடையது. விதை சாம்பல் நிறமாவோ அல்லது பச்சை நிறமாகவோ காணப்படும்.

பரவல் :

  • தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அதிகம் வளர்கின்றது.

வாழிடம் :

இம்மரம் வறண்ட இலையுதிர் காடுகளிலும் மற்றும் முட்புதர் காடுகளிலும் அதிகம் வளர்கின்றது.

மண் :

கரிசல் மண்

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

150 - 1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

350 –750மி.மீ

வெப்பநிலை :

22 - 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மெதுவான வளரக்கூடியது.

உயரம் :

10 – 15 மீ உயரம் வரை வளரக்கூடியது.

இயற்கை மறு உருவாக்கம்:

  • விதைகள் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் போதிய வெற்றியை அளிப்பதில்லை. எனினும் இம்முறையிலும் இயற்கையில் இனப்பெருக்கம் அடைகிறது.

செயற்கை மறு உருவாக்கம்:

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

விதை நேர்த்தி

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

  • 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் இடபொருட்களான 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய கரவை நிறப்பப்படுகிறது.
  • 1.5 செ.மீ ஆழத்தில் பைக்கு 2 விதைகள் என விதைக்கப்பட வேண்டும்.
  • நாற்று பைகளுக்கு அவ்வப்போது நீர் பாய்ச்ச வேண்டும்.
  • 6 மாதமான நாற்றுகள் நடவு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 3 x 3 மீ அல்லது 3 x 4 மீ குழிகள் பொதுவாக நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிறகு முன்பே எடுக்கப்படுகிறது.
  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பராமரிப்பு:

களையெடுத்தல்:

  • நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு மரங்களை சுற்றிய புதர்களை நீக்க வேண்டும்.
  • முதல் வருடம் - 3 முறை
  • இரண்டாம் வருடம் - 2 முறை
  • மூன்றாம் வருடம் - 1 முறை

களைத்தல்:

  • முதல் களைத்தல் 5 வருடத்திற்கு பிறகு செய்ய வேண்டும்.
  • 10,15,20 மற்றும் 25 வருடங்களில் களைத்தல் வேண்டும்.

நோய்:

  • வேர் அழுகல் - கேனோடெர்மா
  • கருஞ்சேகு அழுகல் - போமஸ் பேடியஸ்

மேலாண்மை:

  • முதல் மூன்று வருடத்திற்கு மரத்தின் இடைவெளியில் வளர்க்கப்படும் பயிர்கள் (வேர்கடலை, சோளம்)

  • 25 – 30 வருடங்கள்.

சந்தை மதிப்பு :

  • இம்மரம் டன் 2200 என்ற விலையில் விற்கப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

மரக்கட்டை:

  • கட்டை கடினமானது
  • இது வேளாண் உபகரணங்கள், கருவிகளின் கைப்பிடிகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அலங்கார மரமாகவும் வளர்க்கப்படுகிறது.

 

-->