பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

பாக்கு மரம்.


அறிவியல் பெயர் :

அரிக்கா கேட்டச்சு

பொதுப்பண்பு :

 • 20 மீ உயரம் வரை வளரக்கூடிய சராசரி அளவுடைய மரமாகும்.
 • இலைகள் நீண்டது மற்றும் தென்னை மட்டை போன்று ஒரு மத்திய நரம்பில் அலைகள் ஒட்டிக்காணப்படும்.
 • இருபால் மலர்களை கொண்டது. மலர்கள் சிறியது மற்றும் பால் போன்ற வெண்ணிறமுடையது.
 • காய்கள் நார்களை கொண்டது, வட்ட வடிவமுடையது மற்றும் பழுத்தபின் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமுடையது.
 • காயினுள் பாக்கு விதைகளிருக்கும்.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவில் அதிகம் பயரிடப்படும் பணப்பயிர்களுள் ஒன்றாகும். மேலும் பாக்கு மரம் சாலமன் தீவு, ஆப்பிரிக்கா மற்றும் வெப்பமண்டல அமெரிக்கா போன்ற பகுதிகளில் வளரும் தன்மையுடையது.

வாழிடம் :

1000 மீ வரை கடல்மட்ட உயரம் கொண்ட வெப்பமண்டல காடுகள் மற்றும் அதிக மழைப்பொழிவுள்ள காடுகளில் அதிகம் வளர்கிறது. இம்மரம் பொதுவாக கடற்கரையோர பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

6.6 – 7.3

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 – 4500 மி.மீ

வெப்பநிலை :

14 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • வறட்சியை தாங்கி வளரும் தன்மையற்றது.
 • ஒளி மற்றும் நிழல் விரும்பி மரமாகும்.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • விதைகள் மூலமாக இனப்பெருக்கம் போதுமானதாக இருப்பதில்லை.

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
  தரமான நாற்றகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

 • காய்கள் சிவப்பு அல்லது மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக மாறியபின் சேகரிக்கப்படுகிறது.
 • விதைகளை குறைந்த நாட்கள் மட்டுமே முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைத்திருக்க முடியும்.
 • சேகரிக்கப்ட்ட 7 நாட்களுக்குள் விதைகளை விதைப்பது சிறந்ததாகும்.

 • தேவையில்லை.
 • விதையுறையுடன் காயை விதைக்க வேண்டும்.
 • விதைக்க பயன்படுத்தும் காயை வெயிலில் காய வைக்க கூடாது.

 • விதைகள் 5 – 6 செ.மீ இடைவெளியில் மணல் கலந்த தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
 • தாய்பாத்திக்கு நிழல் அமைப்பது அவசியமாகும்.
 • 2 இலைகள் துளிர்விட்டபின் வனப்பகுதியிலுள்ள மண் நிறப்பப்பட்ட 30 à®’
 • 10 செ.மீ அளவுள் ள பாலித்தீன் பையில் நடப்படுகிறது.
 • 12 – 18 மாதம் வரை மிதமான நிழலில் நாற்றுகள் வளர்க்கப்படுகிறது.
 • நாற்றுகள் பின் இரண்டாம் நிலை நாற்றங்காளுக்கு மாற்றப்படுகிறது.
 • நாற்றுகள் இந்நாற்றங்காலில் 30 செ.மீ இடைவெளியில் நடப்படுகிறது.
  அவ்வப்போது நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • அதிக இலைகளை கொண்ட நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • 1 – 2 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. 90  x 90  x
 • 90  செ.மீ அளவுள்ள குழியில் 2.75 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
 • நட்டபின் குழியினுள் மண் நிறப்பி சுற்றி காலினால் நன்கு மிதித்துவிட வேண்டும்.
 • புதிதாக நடப்பட்ட பண்ணையில் வாழையை பயிரிடுவதன் மூலம் நிழல் ஏற்படுத்தலாம்.

 • வருடத்திற்கு 2 – 3 முறை மண்வெட்டி கொண்டு களைகளை நீக்க வேண்டும்.
 • சரிவான நிலப்பகுதியில் மண் அரிமானத்தை தடுக்க மேட்டுத்தள பண்ணையம் மேற்கொள்ள வேண்டும்.

 • நடப்பட்டதிலிருந்து 5 வருடங்களில் காய்க்க துவங்குகிறது.
 • காய் மூன்றுபக்கமும் பழுத்தபின் அறுவடை செய்யப்படுகிறது.
 • பண்ணை அமைந்துள்ள பகுதி மற்றும் பருவ நிலை பொறுத்து ஒரு வருடத்திற்கு 3 – 5 முறை அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர் சாகுபடி :

 • கொக்கோ, மிளகு, காப்பி, வெனிலா, இலவங்கம் மற்றும் எலுமிச்சையுடன் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

 • பாக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பொருளாகும்.