பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

முராங் மூங்கில்


அறிவியல் பெயர் :

பேம்பூசா நுடன்ஸ்

பொதுப்பண்பு :

 • இது இலையுதிர் அல்லது இலையுதிரா தாவரமாகும். 
 • இது தடித்த சுவர்களையுடைய 6-15மீ உயரமும் 5-10செ.மீ விட்டமும் உடைய கழிகளைக் கொண்டிருக்கும். 
 • இது இந்தியாவின் காகித உற்பத்தியில் 6வது முக்கிய பங்கு வகிக்கிறது.

பரவல் :

 • இது ஹிமாச்சலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்து வளரும்.
 • மேலும் தென்னிந்தியாவின் சில இடங்களில் காணப்படுகிறது.

வாழிடம் :

மலைச்சரிவுகள், சமவெளிகளில் வளருகிறது.

மண் :

வடிகால் வசதியுடைய மணற்பாங்கான மண் வகையில் வளரும்.

மண் pH :

4.5-7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

600-1500 மீட்டர்

மலையளவு :

1000-5000மி.மீ

வெப்பநிலை :

13-39 செல்சியஸ்

நிலப்பரப்பு :

ஈரப்பர நிலங்களை விரும்பும்

மரப்பண்பு :

 • அதிக ஒளி விரும்பி, கடினத்தன்மையுடன் வறட்சியைத் தாங்கி வளரும்.

வளரியல்பு :

இலையுதிர் அல்லது இலையுதிரா தாவரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக வளரக்கூடியது.

உயரம் :

12 மீட்டர்

இயற்கை மறு உருவாக்கம்:

 • விதைகள் மூலம்

செயற்கை மறு உருவாக்கம்:

 • நேரடி விதைப்பு

 விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 • 35-45வது ஆண்டில் தொடர்ந்து 2-3 ஆண்டுகள் பூக்கும்.
 • பூக்க ஆரம்பித்த சில ஆண்டுகளில் விதைகளை சேகரிக்கலாம்.

விதை நேர்த்தி:

 • 24 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைக்கலாம்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 • மார்ச் - மே மாதங்களில் நேரடியாக நாற்றாங்களில் விதைக்கலாம்.  செடி தருணத்தில் நிழல் தருவது அவசியமாகும்.
 • 45 நாட்கள் கழித்து பாலித்தீன் பைக்கு மாற்ற வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நடவு தொழில்நுட்பம்:

 • பருவ மழைக்கு முன்பு நடவு செய்தல் நன்று.
 • நடவுக்கு முன் களையெடுத்து வேலி அமைக்க வேண்டும்.

குழியளவு:

 • 45X45X45செ.மீ3 அளவில் குழி எடுத்து காய விட வேண்டும்.

பராமரிப்பு:

நீர்பாசனம்:

 • முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.

கலைத்தல்:

 • பழைய இறந்த கழிகளை நீக்கிவிட வேண்டும்.

முக்கிய பயன்கள் :

 • சில இடங்களில் தேயிலைத் தோட்டத்திற்கு நிழல் தர வளர்க்கப்படுகிறது. 
 • இது நேரான, உயரமான, உறுதியான கழிகளைத் தருவதால் பல்வேறு வகையாகப் பயன்படுகிறது. 
 • காகிதம் மற்றும் அரக்கு தொழிற்சாலையில் பயன்படுகிறது.

 • பிசின் இதிலிருந்து எடுக்கப்படும் முக்கியப் பொருளாகும்.
 • இதனை நேரடியாக உபயோகிக்காமல் மற்ற பிசினுடன் கலந்து உபயோகிக்கப்படுகிறன்றது.

-->