பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

இந்திய முள்ளு முருங்கை


அறிவியல் பெயர் :

எரித்திரினா வேரிகேட்டா

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும். அதிக எண்ணிக்கையிலான கிளைகளையுடையது.
 • மரப்பட்டையானது மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.       
 • இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் வெளிர் பச்சை நிறமுடையது.
 • பூக்கள் அடர் சிவப்பு நிறமுடையது.
 • இதன் அடர் கருப்பு நெற்றானது 6 – 12 அடர் சிவப்பு அல்லது சாம்பல் நிற விதைகளை கொண்டிருக்கும்.

பரவல் :

 • இந்தியா முழுதும் பரவலாக பயிரிடப்படும் மரமாகும்.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 1500 மி.மீ

வெப்பநிலை :

32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • பனியை தாங்கி வளராது.
 • இதன் மறுதாம்பு நன்கு வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • நேரடி உற்பத்தி மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த விதையானது பிப்ரவரிஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட விதைகள் காய வைக்கப்பட்டு பின் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
 • விதை முளைப்புத்திறன் 80 – 90 சதவிகிதமாகும்.
 • விதைகள் 12 மாதங்கள் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.

 • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

 • விதைகள் தாய்பாத்தியில் மார்ச் - ஏப்ரல் கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
 • விதைகள் ஒரு வாரத்தில் முளைக்க துவங்கி ஒரு வருடத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.
 • 30 செ.மீ உயரமுள்ள 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • 30 செ.மீ உயரமுள்ள 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
 • வளர்நத பின் மரங்களுக்கிடையேயான இடைவெளி 10 x 10 மீ என இருக்குமாறு மரங்களை நீக்க வேண்டும்.
 • இவ்வாறு நடும்பொழுது 70 - 80 சதவிகித வெற்றியை தரக்கூடியது

 • அவ்வப்போது களைகள் நீக்குதல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.

 • 15 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

 • இம்மரம் தோராயமாக 2800 – 3000 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

 • கடலோர பகுதிகளில் படகிற்கு துடுப்பாகவும், கட்டுமரம் தயாரிக்க மற்றும் இதர மீன்பிடி பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
 • உயிர் வேலியாக இம்மரம் பயரிடப்படுகிறது.
 • கடலோர பகுதிகளில் காற்று தடுப்பானாக இம்மரம் பயரிடப்படுகிறது.
 • நிழல் தரும் மரமாக இம்மரம் பயன்படுகிறது.