பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

அசோக மரம்


அறிவியல் பெயர் :

சரக்கா அசோகா

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
 • இலைகள் அடுத்தடுத்து அமைந்தவை. இளமையில் இளஞ்சிவப்பு நிறமாகவும் முதிர்ந்தவுடன் அடப் பச்சை நிறமானவும் மாற்றமடைகிறது.
 • மரப்பட்டை அடர் பச்சை நிறமுடையது.
 • மணமுடைய இதன் மலர்கள் ஆரஞ்சு அல்லது முஞ்சள் நிறமுடையது.
 • காய்கள் 4 – 8 விதைகளை கொண்டது. காய்கள் குழுமமாக காய்க்கவல்லது.
 • காய்கள் கருப்பு நிறமுடையது மற்றும் இதன் கனியுறையானது முதிர்ந்தவுடன் உதிர்ந்துவிடக்கூடியது.

பரவல் :

 • இம்மரம் இந்தியா முழுதும் பரவலாக வளரக்கூடியது. தென்னந்தியாவிலும் இம்மரம் இயற்கையாகவே வளரக்கூடியது.

வாழிடம் :

இம்மரம் எரிமலை பகுதிகளிலுள்ள மண்ணிலும் மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளிலும் அதிகம் வளர்கின்றது.

மண் :

நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளம் மிக்க மண்ணில் நன்கு வளரக்கூடியது.

மண் pH :

5.5 – 6

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

720 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

700 – 1500 மி.மீ

வெப்பநிலை :

25 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • நிழலை தாங்கி வளரக்கூடியது.
 • மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • விதைகள் மூலம் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த விதையானது டிசம்பர் - ஜனவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையில் 90 - 100 விதைகளிருக்கும்.

 • குளிர் நீரில் 12 மணி நேரம் ஊர வைக்கப்பட வேண்டும்.

 • மார்ச் மாதம் நாற்றுகள் உற்பத்தி செய்ய சிறந்தது
 • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய 25 x 20 செ.மீ அளவுடைய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 15 நாட்களில் விதைகள் முளைத்து விடுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
 • ஒவ்வொரு குழியிலும் மேல் மண் மற்றும் எரு கலந்தகலவை 10 கிராம் இட வேண்டும்.

 • இம்மரம் அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் வளர்க்கப்படுகிறது.
 • மழை பொழிவு இல்லாத காலகட்டத்தில் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
 • வளர்ந்த பின் மரத்தை சுற்றி வளையம் தேன்றினால் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.

 • எரிபெருளுக்காக 15 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

 • ஒரு கிலோ மரப்பட்டை 30 – 35 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

 • இம்மரம் எப்பொழுதும் பசுமையாகவே இருப்பதால் அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
 • இதன் மரப்பட்டை மருந்திற்காக அதிகளவில் எடுக்கப்படுகிறது.

 • மரப்பட்டை வலி நிவாரணி, காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுகிறது.

-->