பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மலைவேம்பு


அறிவியல் பெயர் :

மீலியா டூபியா

பொதுப்பண்பு :

  • 6 – 30 மீ உயரம் வரை வளரும் இலையுதிர் மரமாகும்.
  • மரம் மென்மையாகவும் இளமையில் பச்சை நிறமாகவும், முதிர்ந்த பின் சாம்பல் நிறமாகவும் காணப்படும்.
  • பூக்கள் பச்சை கலந்த வெளிர் நிறமாகவும் காணப்படும். ஆதிக எண்ணிக்கையில் பூக்கக்கூடியது. பூக்கள் நட்சத்திற வடிவமுடையது.
  • கனியானது பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.

பரவல் :

  • இந்தியாவில் ஈர இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

வாழிடம் :

ஈர இலையுதிர் காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

தண்ணீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும். செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் நல்ல மகசூலை தரவல்லது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

600 - 1800மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

மழையளவு 1000 மி.மீ வரையுள்ள இடங்களில் இம்மரம் நன்கு வளரும்.

வெப்பநிலை :

21 - 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.

வளரியல்பு :

இது ஒரு இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • விதையின் மூலம் இயற்கையாக இனப்பெருக்கம் அடைகிறது. ஆனால் முளைப்பு திறன் குறைவாக காணப்படும். 

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • காயானது பழுத்த பிறகு சேகரிக்கப்படுகிறது. ஜனவரிபிப்ரவரி மாத கால இடைவெளியில் முதிர்ந்த விதைகளானது சேகரிக்கப்படுகிறது.
  • விதைகள் சூரிய ஒளியில் நன்கு உலர்த்தப்படுகிறது.
  • உலத்தப்பட்ட விதைகள் காற்றுபுகா வண்ணம் சேமிப்பு கலன்களில் சேகரிக்கப்படுகிறது.

 

விதை நேர்த்தி: 

 

  • விதையானது தண்ணீரில் ஊர வைக்கப்படுகிறது. மிதக்கும் விதைகள் நீக்கப்படுகிறது. பிறகு விதைபடுக்கையில் விதைக்கப்படுகிறது.

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

நாற்றங்கால் உற்பத்தி :

 

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு மார்ச் - ஏப்ரல்
  • மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • தரம் பிரிக்கப்பட்ட விதைகள் மேட்டுப்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • விதையானது மணலில் முளைக்காது.
  • பாத்திக்கு மேலும் சத்துக்களை அளிக்க 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு சேர்க்கப்படுகிறது.
  • ஒரு தாய்பாத்திக்கு 6 – 7 கிலோ விதைகள் அல்லது 1500 விதைகள் தேவைப்படும்.
  • பூவாளி கொண்டு தினமும் நீர்பாய்ச்ச வேண்டும்.
  •  
  • விதைக்கப்பட்டதிலிருந்து 6 வாரங்களில் விதைகள் முழுவதுமாக முளைத்துவிடுகிறது

 

உடல இனப்பெருக்கம் :

 

  • உடல இனப்பெருக்கம் மூலம் தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகை உடல இனபெருக்கத்திற்கு 1000 – 2000 பி.பி.எம் இன்டோல் பியூட்டரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
  • முதிர்ந்த மரக்கள் இவ்வகை நாற்று உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • பென்சில் அளவுள்ள குச்சிகள் நாற்று உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இளம் குச்சிகள் இவ்வகை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதள்ள.
  • குச்சிகள் மணல் கொண்ட தட்டில் வளர்க்கப்படுகிறது. ஆதிக ஈரப்பதம் நாற்று உற்பத்திக்கு ஏற்றதள்ள.
  • நாற்று உற்பத்திக்கு ஏற்ற பருவ காலத்தில் உற்பத்தியை துவங்குவது சிறந்ததாகும். கோடை காலம் நாற்று உற்பத்திக்கு ஏற்றதாகும்.

 

  • Cold Water treatment for 48 hours

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 8 x 8 மீ என இருக்க வேண்டும்.
  • உரமிடுவதன் மூலம் மரத்தின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
  • தொடர்ந்து நீர் பாய்ச்சுவதன் மூலம் நல்ல மகசூலை பெற முடியும்.
  • மேட்டுக்காடுகளில் இதன் மகசூல் சற்று குறைவாகவே இருக்கும்.

 

  • பக்க கிளைகளை அகற்றுவதன் மூலம் நேரான, தரமான மரத்தை பெறமுடியும்.

 

  • 5 - 15 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • 50 – 20 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு டன் மரம் 7500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
  • 120 செ.மீ மேல் சுற்றளவு கொண்ட ஒரு கியூபிக் அடி 370 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

  • ஒட்டுப்பலகை தயாரிப்பில் இதன் மரம் பயன்படுகிறது.
  • இதன் மரம் பெட்கள் தயாரிக்கவும், உள் கட்டிட பயன்பாடுகளுக்கும், வேளாண் உபகரணங்கள் செய்யவும், தீக்குச்சி தயாரிக்கவும், பென்சில் தயாரிக்கவும் மற்றும் இசைக்கருவிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.