பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

உத்தி மரம்


அறிவியல் பெயர் :

லேனியா கோரமென்டலிக்கா

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
 • மரப்பட்டையானது வெளிர் சாம்பல் அல்லது கருப்பு நிறமுடையது.
 • மரப்பட்டையில் பால் வெண்ணிற கோடுகள் காணப்படும்.
 • இலைகள் பெரியது மற்றும் பச்சை நிறமுடையது.
  பூக்கள் சிறியது.
 • காய்கள் டுரூப் வகையை சேர்ந்தது. காய்கள் வெளிர் சிவப்பு நிறமுடையது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவின் வறண்ட பகுதிகளில் அதிகம் வளர்கின்றது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

ஈரமான அல்லது மணல் கலந்த செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது. சதுப்பு நிலப்பகுதிகளிலும், களிமண் மற்றும் கால்கேரியஸ் மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

4.5-8

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1800 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 – 3800 மி.மீ

வெப்பநிலை :

37 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மிதமான சரிவு நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • அதிக ஒளி விரும்பி மரமாகும்.
 • வறட்சியை மற்றும் தீயை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • விதைகள் மே - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • விதைகள் சுத்தம் செய்யப்பட்டு காய வைக்கப்படுகிறது.
 • காய வைக்கப்பட்ட விதைகள் பாலித்தீன் பையில் சேகரிக்கப்படுகிறது.
 • விதைகள் குறைந்த நாட்கள் மட்டுமே முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
 • ஒரு கிலோ விதையில் 7500 - 10500 விதைகளிருக்கும்.
 • விதை முளைப்புத்திறன் 45 – 65 சதிவிகிதமாகும்.
 • நாற்று உற்பத்தி திறன் 14 – 20 சதவிகிதமாகும்.

 • தேவையில்லை.

 • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • விதைக்கப்பட்ட பின் மணல் கொண்டு மேலிருக்கும் விதைகள் மூடப்படுகிறது.
 • நாற்றங்காலுக்கு தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
 • விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது. 4 வாரங்களில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
 • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றானது வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

 • அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.

 • 25 - 30 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

 • இதன் மரம் தூண்கள் அமைக்க, மின் கம்பம் அமைக்க, சிற்ப
 • வேலைபாடுகளுக்கு மற்றும் பெட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது.
 • கோந்து தயாரிக்க பயன்படுகிறது.
 • இதன் இலைகள் கால்நடை தீவனமாக பயன்படுகிறது.

இதர பயன்கள்:

 • பட்டைகளில் டானின் உள்ளது.  இது மீன்வலை தயாரிக்கப்பயன்படும்.
 • ஜின்கம் -கம் எனும் கரையும் ரெசின் தண்டிலிருந்து கிடைக்கிறது. 
 • இது காலிகோ அச்சில் பயன்படுகிறது.

வேளாண்காடுகள்:

 • உதிய மரத்தினை வரப்பு ஓரங்களில் நடுவதின் மூலமாக உயிர் வேலியாக பயன்படுத்தலாம்.

-->