பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

இலவம்பஞ்சு


அறிவியல் பெயர் :

சீபா பென்டேன்ட்ரா

பொதுப்பண்பு :

  • மிதமான அளவு முதல் பெரிய அளவிலான, இலையுதிர் மரமாகும்
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
  • இலையானது அடர் பச்சை நிறமாகவும், பூக்கள் பால் போன்ற வெளிர் நிறமாகவும் காணப்படும்.
  • விதையானது உருளையாகவும், 10 – 15 செ.மீ நீளமுடையதாகவும் காணப்படும். நெற்றானது 5 அறைகளையுடையது மற்றும் பஞ்சுபோன்ற திசுவை கொண்டது.

பரவல் :

  • இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகளிலும் மற்றும் இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.

மண் :

நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரக்கூணயது. ஆழமான மனற்பாங்கான மண் மற்றும் செம்பொறை மண்ணில் நன்கு வளரக்கூடியது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750-3000மி.மீ

வெப்பநிலை :

18 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வலிமையான ஒளி விரும்பி, மற்ற தாவரங்களுடன் போட்டியிடும்.
  • நீண்ட வறட்சியை தாங்கும், ஆனால் பனியை அளவாகவே தாங்கும்.

வளரியல்பு :

இலையுதிர் மரம்மாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


இயற்கை மறு உருவாக்கம்:

  • எதிர்பார்க்கும் அளர்விற்கு வெற்றியை தருவதில்லை.

செயற்கை மறு உருவாக்கம்: 

  • நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • விதையானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 45000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 90-95 சதவிகிதம் ஆகும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்

விதை நேர்த்தி

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் அல்லது குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் பைக்கு 2-3 விதைகள் என விதைக்கப்பட வேண்டும்.
  • ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • வட கிழக்கு பருவ மழையின் பொழுது நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • 12-15 செ.மீ உயரம் வரும் வரை இலகுவான நிழலில் வளர்க்க வேண்டும்.
  • 45-60 செ.மீ உயரம் வரை முழுமையான சூரிய ஒளியில் வளர்க்கலாம்.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நேரடி விதைப்பு:

  • பருவ மழை சமயத்தில் 3.7 x 3.7 மீ இடைவெளியில் 3 – 6 விதைகள் நேரடியாக நடப்படுகிறது.

நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :

  • நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
  • மேல் மண் கொண்டு நாற்றுகள் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.

 

  • நடப்பட்ட முதல் வருடத்தில் களைகள் எடுப்பது அவசியமாகும்.
  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
  • பக்க கிளைகள் அகற்றுதல் அவசியமாகும்.

  • 30 - 45 வருடங்கள்

முக்கிய பயன்கள் :

  • இதன் பஞ்சு பொருளாதார முக்கித்துவம் வாய்ந்த பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • பஞ்சுகள் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கவும் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் பஞ்சு குளிர் சாதன பெட்டிகளிலும் , மற்ற குளிர் சாதன பொருட்களின் பாகங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • தலையனைகள் தயாரிக்கவும், மற்ற வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

கொழுப்பு அமிலங்கள்:

  • சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் பிண்ணாக்கு அதிக புரோட்டீன் கொண்டது. எனவே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

 

கொழுப்பு அமிலங்கள்:

  • விதையில் 2-25% உலராத எண்ணெய் உள்ளது. 
  • சோப்பு தயாரிக்க உராய்வு காப்பு பொருள் மற்றும் சமயலிலும் பயன்படுகிறது.

மருத்துவ பயன்கள்:

  • அடர்த்திமிக்க இலையானது தலைவிலிக்கு எதிராக பயன்படுகிறது. 
  • வேர்க்கசாயம் எடீமா மருத்துவத்திற்கு பயன்படுகிறது. 
  • கோந்து சாப்பிட வயிறு உபாதை இருமல் நீங்கும்.

-->