பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

துறிஞ்சி மரம்


அறிவியல் பெயர் :

அல்பைசியா அமாரா

பொதுப்பண்பு :

  • இது ஒரு சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரம் அடர் பச்சை நிறத்தில் காணப்படும்.
  • பூக்கள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வெளிர் சாம்பல் நிறமாகவோ காணப்படும்.
  • நெற்று மற்றும் விதையானது வெளிர்பச்சை நிறமாக காணப்படும்.
  • ஒரு நெற்றில் 6 – 8 விதைகள் இருக்கும்.

பரவல் :

  • இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக மழை பெய்யும் பகுதிகளை தாயகமாக கொண்டது.

வாழிடம் :

இவை பொதுவாக தென்னிந்தியாவின் வறண்ட இலையுதிர் காடுகளிலும், முட்புதர் காடுகளிலும் அதிகம் வளரும் மரமாகும்.

மண் :

இவை செம்மண், சரளை மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் ஆகியற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

900 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

600 – 1000 மி.மீ

வெப்பநிலை :

30 – 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


இயற்கை மறு உருவாக்கம்:

  • இவை விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது. மறுதாம்பு மூலமும் இனப்பெருக்கமடையக்கூடியது.

செயற்கை மறு உருவாக்கம்: 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
  • நெற்றானது ஜனவரிபிப்ரவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 14000 விதைகள் இருக்கும்.
  • விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் 2 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம்.

விதை நேர்த்தி

  • தேவையில்லை. ஏனெனில் விதை முளைப்புத்திறன் 75 – 80 சதவிகிதம் ஆகும்.
  • இளம் மரத்திலிருந்து சேகரிக்கப்படும் விதைகளின் முளைப்புத்திறன் முதிர்ந்த மரத்திலிருந்து சேகரிக்கப்படும் விதைகளின் முளைப்புத்திறனைவிட குறைவாகும்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • விதையானது தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • இரண்டு இலைகள் துளிர்விட்ட நாற்றானது பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
  • விதை முளைப்புத்திறனானது 50 – 75 சதவிகிதமாகும்.
  • நாற்றிற்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு களைகள் எடுத்தல் மற்றும் உழுதல் மேற்கொள்ள வேண்டும்.
  • கால்நடைகள் மேய்ச்சலிலிருந்து வேலியிட்டு பாதுகாப்பது அவசியமாகும்.

  • 25 - 30 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3200 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் வீட்டு கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் இவை கைபிடிகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதன் இலைகள் நெல் வயல்களுக்கு உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது.

பசுந்தீவனம்:

இலைகள் நல்ல தீவனமாகும்.

இலைகள், நெற்ப்பயிரில் பசுந்தாள் உரமாகும்.

எரிபொருள்:

சிறந்த எரிபொருளாகும்.                                        

5049 கிலோ கலோரி/கி.கி கலோரி மதிப்பாகும்.

-->