பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

கத்தி சவுக்கு


அறிவியல் பெயர் :

அகேசியா ஆரிகுளிபார்மிஸ்

பொதுப்பண்பு :

 • 10 – 15 மீ உயரம் வரை வளரக்கூடிய சராசரி அளவுடைய பசுமைமாறா மரம். இம்மரம் தன் வாழ்நாளில் 60 செ.மீ சுற்றளவு வரை வளரக்கூடியது.
 • இலைக்காம்பு தட்டையாக மாறுபாடு அடைந்து இருக்கும். இதற்குபில்லோடுஎன்று பெயர்.
 • பூக்கள் 4மி.மீ நீளமும், அடர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
 • நெற்று 1.2 செ.மீ அகலமும் தட்டையான கட்டை போன்றும் மற்றும் கோணலாக காணப்படும்.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இம்மரம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

வாழிடம் :

இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இம்மரம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

மண் :

இம்மரம் ஆழமான மண் அல்லது குறைவான ஆழமுடைய இடத்திலும், அமில அல்லது காரத்தன்மை கொண்ட செம்மண், களிமண், செம்பொறை மண் மற்றும் மணற்பாங்கான மண்ணிலும் வளரக்கூடியது.

மண் pH :

6 மற்றும் 7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

600மீ. வரை வளரக்கூடியது.

மலையளவு :

600 - 1000மி.மீ

வெப்பநிலை :

20 – 30 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்சூகூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்காள நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இம்மரம் ஒரு அதிக ஒளி வரும்பி மரமாகும்.
 • இம்மரத்தின் நிழலிலேயே இயற்கை மறு உருவாக்கம் அடையக்கூடியது. 
 • மிதமான வறட்சியை தாங்கக் கூடியது.
 • இம்மரம் எளிதில் தீப்பற்றக் கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • இம்மரத்தின் நிழலிலேயே மறு உருவாக்கம் அடையக் கூடியது.
 • 16 வயதான மரங்களில் இருந்து விழும் விதைகள் நல்ல முளைப்புத்திறன் கொண்டது. இவ்விதைகள் மிதமான தீயில் எரிப்பதன் மூலம் விரைவான முளைப்புத்திறனை பெறமுடியும்.
 • கவாத்து செய்வதன் மூலம் மரக்கன்று வேகமாக வளருகிறது.

 • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • இம்மரம் 40 வருடம் வரை காய்க்கும் திறன் கொண்டது.
 • ஜனவரி - பிப்ரவரி மாத இடைவெளியில் விதைகள் முதிர்ச்சி அடையும்பிப்ரவரி - மார்ச் மாத இடைவெளி விதை சேகரிப்புக்கு உகந்தது.
 • நெற்றுகள் சேகரித்த பிறகு 5-10 நாட்களில் வெயிலில் காயவைக்க வேண்டும்.
 • காய வைக்கப்பட்ட விதைகளிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
 • பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் காற்றுபுகாத கொள்கலன்களில் சேகரிக்கப்படுகிறது.
 • விதைகள் 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
 • 1 கிராம் விதையில் 43 விதைகள் இருக்கும்.
 • இதன் விதை முளைப்புத்திறன் அதிகமாகும்.
 • விதை முளைப்புத்திறன் குறைந்தது 50 சதவிகிதமாகும்.
 • நாற்று உற்பத்தி திறன் 65 சதவிகிதமாகும்.
 • 1 கிலோ விதைகளிலிருந்து 27300 நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.

 • விதைப்புக்கு முன் 24-36 மணி நேரம் தண்ணீரில் விதை ஊர வைக்க வேண்டும்
 • அல்லது கொதித்த நீரில் ஊர வைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு பிறகு 24 மணி நேரம் மிதமான நிழலில் காயவைக்க வேண்டும்.

நாற்றாங்கால் படுக்கை:

 • பிப்ரவரிமார்ச் அல்லது டிசம்பர் - ஜனவரி மாதங்களில் 5 x 5 செ.மீ இடைவெளியில் விதைகள் தாய்பாத்தியில் விதைக்கப்பட வேண்டும்.
 • தாய்பாத்தியானது மக்கிய உரம், செம்மண் மற்றும் சாம்பல் கலந்து கலவை கொண்டு அமைக்க வேண்டும்.
 • தாய்பாத்திக்கு மிதமான நிழல் அமைக்க வேண்டும் ஏனெனில் அதிக சூரிய வெயிலில் விதை முளைப்புத்திறன் குறைவாக இருக்கும்.
 • 1 – 1.5 மீ உயரம் வரை வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. நடவுபணிகள் ஜுலை மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.

பாலித்தீன் பையில் மரக்கன்று உற்பத்தி:

 • 23 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • பாலித்தீன் பையில் 3:1 விகிதத்தில் மண் மற்றும் மக்கிய சாணத்தை கலந்து கலவையை  நிறப்ப வேண்டும்
 • விதைகளை 1 செ.மீ ஆழத்தில் விதைப்பது அவசியமாகும்.
 • விதைகள் முளைக்க துவங்கும் தருவாயில் நிழல் அமைப்பது மிக முக்கியமானதாகும்.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 15 – 21 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
 • நாற்றுகள் ஜுன் - ஜுலை மாத கால இடைவெளியில் நிலங்களில் நடப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • பருவ மழை காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • 3 – 4 மாதமான பாலித்தீன் பை நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • குழியின் அளவு 30 x 30 x 30 செ.மீ இருப்பது சிறந்ததாகும்.
 • வரப்பு நடவிற்கு 1.5 x 1.5 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.
 • மொத்த நடவிற்கு 1.83 x 1.83 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது (4 வருடத்திற்கு பிறகு 50% மரங்கள் நீக்கப்பட வேண்டும்.
 • விறகிற்கான நடவு அல்லது கூழ்மர நடவிற்கு 2-4 x 2-4 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது

 • நடப்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு களையெடுப்பது அவசியமாகும்
 • மர வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்க அவ்வப்போது உரமிடுதல் வேண்டும்.

உபயோகத்தை பொறுத்து அறுவடை காலங்கள் மாறுபடுகிறது.

 • விறகு               - 4-5 வருடம்
 • மரக்கூழ்           - 8-10 வருடம்
 • மரக்கட்டை       - 12-15 வருடம்
 • மகசூல்              - 17-20 .மீ/ஹெக்டர் /வருடம். (10-20 வருடம்)
 • சமூக காடுகள்    - 7-9 .மீ/ஹெக்டர் /வருடம். (9 வருடம்

முக்கிய பயன்கள் :

விறகு:

 • இம்மரம் விறகிற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறதுஇம்மரம் 4800-4900 கலோரி/கி.கி அளவு வெப்பத்தை தரவல்லது.
 • இம்மரமம் சிறந்த கரிகட்டையை தரவல்லது. இம்மரத்தை எரிக்கும்பொழுது குறைந்தளவு புகையையே வெளிவிடுகின்றன.
 • மற்ற விறகு மரங்களைவிட இம்மரமே அதிகமாக விறகிற்காக பயன்படுத்தப்படுகிறது. வீட்டு விறகு உபயோகத்திற்கும் இம்மரம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

மரக்கூழ்:

 • இம்மரம் காகித கூழ் தயாரிக்க ஏற்றதாகும். எனவே இம்மரம் காகித கூழ் மற்றும் மரக்கூழ் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

மரக்கட்டை:

 • இதன் மரம் மரச்சாமான்கள் செய்யப்பயன்படுகிறது.
 • இம்மரம் 15 சதவிகித டானின் கொண்டது. லெதர் போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.