பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பெரிய இலையுடைய மகோகனி


அறிவியல் பெயர் :

ஸ்விடினியா மாக்ரோபைல்லா

பொதுப்பண்பு :

  • 45-60மீ உயரம் வரை வளரக்கூடிய இலையுதிர் மரமாகும்.
  • இதன் தண்டு நேரானது, உருளையானது.
  • இதன் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடைய பூக்கள் மணம் கமலக்கூடியது.
  • இதன் காயானது பல விதைகளை கொண்டது. இதன் விதைகள் சிறகு வடிவமானது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மரமாகும்.
  • இந்தியாவில் இம்மரம் 800 மி.மீ மழையளவு பெறும் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

பசுழை மாறாக்காடுகளிலும் மற்றும் இலையுதிர் காடுகளிலும் காணப்படும்.

மண் :

மணற்பாங்கான செம்மண் மற்றும் செம்பொறை மண்ணில் நன்கு வளரக்கூடியது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

450 மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

1500 – 5000 மி.மீ

வெப்பநிலை :

20 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • ஒளி விரும்பி மற்றும் நிழலைத்தாங்கி வளரும்.
  • பனியை தாங்கி வளருவதில்லை.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:    

 

  • விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:     

 

  • சூரிய ஒளியில் உலர்ந்த கனிகள் கீழே விழுந்தபின் சேகரிக்கப்படுகிறது.
  • அறை வெப்பநிலையில் இம்மரத்தின் விதைகள் 3 – 4 மாதங்கள் சேமித்து வைக்கலாம்.
  • புதிய விதைகள் 60 – 90 சதவிகிதம் முளைப்புத் திறனுடையது.

 

விதை நேர்த்தி:

 

  • தேவையில்லை 

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

  • 5 x 7.5 செ.மீ இடைவெளியில் 2-4 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். விதைக்கப்பட்ட பின் தாய்பாத்திக்கு மூடாக்கு அமைக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 14 – 28 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • விதை முளைப்பு சதவிகிதம் 20 – 40 சதவிகிதம் ஆகும்.
  • நாற்றுகள் 6 மாதத்தில் 60 – 75 செ.மீ உயரம் வளர்கின்றது.

 

  • It is propagated by Nursery raised seedlings.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 5 x 7.5 செ.மீ இடைவெளியில் 2-4 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். விதைக்கப்பட்ட பின் தாய்பாத்திக்கு மூடாக்கு அமைக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 14 – 28 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • விதை முளைப்பு சதவிகிதம் 20 – 40 சதவிகிதம் ஆகும்.
  • நாற்றுகள் 6 மாதத்தில் 60 – 75 செ.மீ உயரம் வளர்கின்றது.
  • நடவு தொழிற்நுட்பங்கள்:
  • நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • மேல் மண், 200 கிராம், வேப்பம்பிண்ணாக்கு மற்றும் 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு ஆகியவற்றை குழியினுள் இட்டு நாற்றுகள் நடப்படுகிறது.
  • நாற்றுகள் நடப்படுவதற்கு முன்பே இடுபொருட்களை குழியினுள் இட்டு உலர்த்த வேண்டும்.
  • இடைவெளியானது 6 x 6.5 மீ என இருக்க வேண்டும்.
  • நடப்பட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது மிக முக்கியமானதாகும்.
  • முதல் இரு வாரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு சொட்டுநீர் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையை பயன்படுத்தலாம்.

  • தேவையான அளவு உரங்களை அவ்வப்போது இட வேண்டும்.
  • முதல் வருடம் தழைசத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து (17:17:17) மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் செடிக்கு 200 கிராம் ஆகியவற்றை மாதம் ஒரு முறையிட வேண்டும்.
  • உரமிட்டபிறகு அதனை சிறிது மண்ணை கொண்டு மூட வேண்டும்.

  • 10 ஆண்டுகள்
  • ஒரு ஏக்கருக்கு 1200 – 1500 மரங்கள் என்ற எண்ணிக்கையில் நடப்பட வேண்டும்.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் ரூ.3100 அல்லது சதுர அடி ரூ.500 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

ஊடுபயிர் சாகுபடி :

  • பீன்ஸ், உருளை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி போன்றவற்றை ஊடுபயிராகப்

முக்கிய பயன்கள் :

  • இம்மரத்தின் அழகிய தோற்றம் காரணமாக பொருளாதார முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • இவை மரச்சாமான்கள் செய்யவும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவுமம் பயன்படுத்தப்படுகிறது.

  • வெட்டிய மரப்பட்டையிலிருந்து பசை பெறப்படுகிறது.
  • இது தூய நிலையிலோ மற்றும் பிற பசைகளுடன் கலந்த நிலையிலோ விற்கப்படுகிறது.
  • மரப்பட்டை சடானின் நிறைந்தது.
  • சாயமேற்றப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் கசப்பானது.
  • எண்ணெய் விதையிலிருந்து பெறப்படுகிறது. உட்கருமரம் சிவப்பானது.
  • வயதாக ஆழ்ந்த சிவப்பு () காவி நிறமுடையது.

-->