பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

முந்திரி


அறிவியல் பெயர் :

அனகார்டியம் ஆக்சிடென்டேல்

பொதுப்பண்பு :

  • அகன்ற கிளைகளையுடைய மிதமான அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
  • இலைகள் அடுக்கு முறையில் அமைந்திருக்கும். பச்சை நிறமுடையது.
  • பூக்கள் வெளிர் பச்சை முதல் சிவப்பு நிறமுடையது.
  • இதன் கனிகள் போலிக்கனி வகையை சேர்ந்தது.
  • ஒரு கனியில் ஒரு வதை மட்டுமே இருக்கும்.

பரவல் :

  • முந்திரிக்காக இம்மரம் பரவலாக பயிரிடப்படுகிறது.

வாழிடம் :

வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.

மண் :

Prefers deep, fertile, sandy soils but will grow well on most soils except pure clays or soils that are otherwise impermeable, poorly drained or subject to periodic flooding.

மண் pH :

4.8 – 8.7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 3500 மி.மீ

வெப்பநிலை :

17 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் கடற்கரை சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இம்மரம் வளர அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது.
  • பனியை தாங்கி வளரும் தன்மையுடையது.
  • அதிகப்டியான மழை தேவை.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • மறுதாம்பு உற்பத்தி மூலம் தழைத்து வளரக்கூடியது.

 

  • உடல இனப்பெருக்கம் முலம் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 8 மாதங்கள் வரை பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
  • மிதமான அளவுடைய முந்திரிகள் விதைக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 150 – 200 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 70 - 80 சதவிகிதம் ஆகும்.

  • தேவையில்லை

  • இளம் தண்டிலிருந்து உடல இனப்பெருக்கம் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

  • இம்முறை 70 சதவிகிதம் வெற்றியை தரக்கூடியது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழிக்குள் மேல் மண் மற்றும் எரு கொண்ட கலவை இடப்படுகிறது.
  • ஒட்டு முறை நாற்று வளர்ப்பில் ஒட்டுத்தண்டானது நிலத்திலிருந்து 10 – 15 செ.மீ உயரத்திலிருக்குமாறு ஒட்டப்படுகிறது.
  • அவ்வப்போது பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • சாதாரணமான நடவிற்கு குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 7 x 7 மீ என இருக்க வேண்டும்.
  • அதிகப்படியான பண்ணை உற்பத்திக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • மரம் 1 மீ உயரம் வளரும் வரை பக்க கிளைகளை ஆகற்ற வேண்டும்.
  • இறந்த மற்றும் நோய் தாக்கிய மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

 

  • மரம் நடப்பட்ட 4 ம் ஆண்டிலிருந்து காய்க்க துவங்குகிறது.
  • அறுவடையானது பிப்ரவரிமே மாத கால இடைவெளியில் செய்யப்படுகிறது.

ஊடுபயிர் சாகுபடி :

  • தட்டைபயிறு, கொண்டை, நிலக்கடலை, அன்னாச்சிபழம் ஆகியவை ஊடுபயிராக பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • முந்திரிக்காக இம்மரம் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இதன் ஓட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகின்றது.
  • விதையிலிருந்து எடுக்கப்படும் தவிடானது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதன் மரம் மரச்சக்கரங்கள் செய்யவும், மீன்பிடி படகு தயாரிக்கவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும் மற்றும் உள் கட்டுமான பணிகளுக்கும் அதிகளவு பயன்படுகிறது.

தீவனம்:

  • புண்ணாக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • விதை உறையானது கோழித்தீவனமாக பயன்படுகிறது.

எரிபொருள்:

  • இதன் கட்டையானது எரிபொருளாகவும் கரி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.
  • மேலும் இதன் கொட்டையின் ஓடானது எரிபொருளாக பயன்படுகிறது.

நார்:

  • மரக்கூழானது பெட்டிகள் தயாரிக்க பயன்படுகிறது.

-->