பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

தேக்கு


அறிவியல் பெயர் :

டெக்டோனா கிராண்டிஸ்

பொதுப்பண்பு :

 • இம்மரம் பெரிய இலையுதிர் மரம்.
 • பெரிய அடர் பச்சை நிறமுடைய இலைகள் கொண்டது.
 • பூக்கள் வெண்மை நிறமுடையது.
 • வட்ட வடிவமுடைய இதன் கனியானது 1-3 விதைகள் கொண்டது.
 • ஆதிக அளவுடைய விதைகளை ஒங்வொரு வருடமும் வழங்கக்கூடியது.

பரவல் :

 • தேக்கு மரம் இந்தியாவை தாயகமாக் கொண்ட மரமாகும்.

வாழிடம் :

வெப்பமண்டல ஈர மற்றும் வறண்ட அலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

நன்கு வடிகால் வசதியுடைய வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

800 - 2500 மி.மீ

வெப்பநிலை :

13 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது அதிக ஒளி விரும்பி மரமாகும்.
 • வறட்சியை தாங்கி வளரக்கூடியது கூடியது.
 • மறுதாம்பு முறை மூலம் நன்கு மழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


இயற்கை மறு உருவாக்கம்:

 • விதைகள் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
 • ஓளி, உறைபனி, மண் மற்றும் தீ போன்றவை இயற்கை மறுஉருவாக்கத்திற்கான முக்கிய காரணிகளாகும்.

செயற்கை மறு உருவாக்கம்:

 • உடலினப்பெருக்கம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன.
 • தண்டு வளர்ப்பு முறை மூலம் அதிகப்படியான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 • தேக்கு மரம் 6 வருடங்களிலிருந்து பூக்க வல்லது. ஆனால் 15 வருடங்களான மரங்கள் விதைக்காக பயன்படுத்தப்படுகிறது.
 • ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் பூக்க துவங்குகிறது. நுவம்பர் - ஜனவரி மாத இடைவெளியில் காய்க துவங்குகிறது.
 • காய்கள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.
 • ஒரு கிலோ விதையில் 1150 – 2800 விதைகள் இருக்கும்.
 • 40 வயதுடைய மரம் சராசரியாக 3 கிலோ விதையை தரவல்லது.
 • காய்கள் 1-2 விதைகள் கொண்டிருக்கும். அதிகப்படியாக 4 விதைகள் கொண்டிருக்கும்.
 • விதையானது சேகரிக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தப்படப்படுகிறது. பின் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
 • விதைகளை 12 சதவிகித ஈரப்பதத்துடன் 2 வருடங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

விதை நேர்த்தி:

 • தேக்கு விதைகள் கடினமாண விதையுறையை கொண்டது. எனவே எளிதாக முளைப்பதில்லை.
 • குளிர் நீரில் 10 நாட்கள் ஊர வைப்பதன் மூலம் விதைகளை முளைக்க வைக்க செய்யலாம்.
 • தொடர்ச்சியாக நீரில் ஊர வைத்தல் மற்றும் காய வைத்தல் முறை மூலமாக விதையை முளைக்க செய்யலாம்.
 • விதைகள்pன் முளைப்புத்திறன் 30 – 50 சதவிகிதம் என வேறுபடுகிறது. ஈர தேக்கு வகைகளுக்கு 5 – 10 சதவிகிதம் என முளைப்புத்திறன் வேறுபடுகிறது.

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

 • விதைகள் மேட்டுப்பாத்தியில் மண் மற்றும் மணல் கலவை கொண்டு விதைக்கப்படுகிறது.
 • தாய்பாத்தி மீது தேங்காய் நார்கள் கொண்டு மூடாக்கு செய்ய வேண்;டும்.
 • நாற்றங்காலுக்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 10 -15 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 35 நாட்களுக்குள் அனைத்து வதைகளும் முளைத்துவிடும்.
 • விதைகள் முளைக்க துவங்கிளவுடன் தேங்காய் நாரை நீக்கி விட வேண்டும்.
 • 6 மாதமான நாற்றுகள் வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 • உடலினப்பெருக்கம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன.
 • தண்டு வளர்ப்பு முறை மூலம் அதிகப்படியான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 • தேக்கு மரம் 6 வருடங்களிலிருந்து பூக்க வல்லதுஆனால் 15 வருடங்களான மரங்கள் விதைக்காக பயன்படுத்தப்படுகிறது.
 • ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் பூக்க துவங்குகிறதுநுவம்பர் - ஜனவரி மாத இடைவெளியில் காய்க துவங்குகிறது.
 • காய்கள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.
 • ஒரு கிலோ விதையில் 1150 – 2800 விதைகள் இருக்கும்.
 • 40 வயதுடைய மரம் சராசரியாக 3 கிலோ விதையை தரவல்லது.
 • காய்கள் 1-2 விதைகள் கொண்டிருக்கும்அதிகப்படியாக 4 விதைகள் கொண்டிருக்கும்.
 • விதையானது சேகரிக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தப்படப்படுகிறதுபின் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
 • விதைகளை 12 சதவிகித ஈரப்பதத்துடன் 2 வருடங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

விதை நேர்த்தி:

 • தேக்கு விதைகள் கடினமாண விதையுறையை கொண்டதுஎனவே எளிதாக முளைப்பதில்லை.
 • குளிர் நீரில் 10 நாட்கள் ஊர வைப்பதன் மூலம் விதைகளை முளைக்க வைக்க செய்யலாம்.
 • தொடர்ச்சியாக நீரில் ஊர வைத்தல் மற்றும் காய வைத்தல் முறை மூலமாக விதையை முளைக்க செய்யலாம்.
 • விதைகள்pன் முளைப்புத்திறன் 30 – 50 சதவிகிதம் என வேறுபடுகிறதுஈர தேக்கு வகைகளுக்கு 5 – 10 சதவிகிதம் என முளைப்புத்திறன் வேறுபடுகிறது.
 •  

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

 • விதைகள் மேட்டுப்பாத்தியில் மண் மற்றும் மணல் கலவை கொண்டு விதைக்கப்படுகிறது.
 • தாய்பாத்தி மீது தேங்காய் நார்கள் கொண்டு மூடாக்கு செய்ய வேண்;டும்.
 • நாற்றங்காலுக்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 10 -15 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 35 நாட்களுக்குள் அனைத்து வதைகளும் முளைத்துவிடும்.
 • விதைகள் முளைக்க துவங்கிளவுடன் தேங்காய் நாரை நீக்கி விட வேண்டும்.
 • மாதமான நாற்றுகள் வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
 •  

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • நடவு நிலமானது நன்கு உழப்படவேண்டும்
 • 3 x 3 மீ அல்லது 3 x 4 மீ குழிகள் பொதுவாக நடவிற்கு பயன்படுத்தபடபடுகிறது
 • மணல் மற்றும் எரு கொண்ட கலவை கொண்டு குழிகள் பதப்படுத்தப்படுகிறது
 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
 • தேக்கு மரம் வரப்புகளில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் நடுவது சிறந்ந வளர்ச்சியை தரவல்லது

 • நடப்பட்ட முதல் வருடத்தில் களைகள் எடுப்பது அவசியமாகும்.
 • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
 • சொட்டுநீர் பாசனம் ஒரு சிறந்த நீர் பாய்சு முறையாகும்.
 • மரத்தின் வளர்ச்சிக்கேற்ப உரமிடவேண்டும்.
 • தேக்கு இலையுண்ணி ஒரு முக்கிய பூச்சியால் ஏற்படும் பாதிப்பாகும். இவ்வகையான பூச்சிகள் வளர்ந்த மற்றும் வளரும் தேக்கு மரங்களை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குகிறது.
 • வேம்பு கலந்த பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் இதனை தடுக்கலாம்.
 • நோய்க்கு ஏற்ற பரிந்துரைக்கப்பட்ட உயிர் மருந்துகளை பயன்படுத்துவது சிறந்த வளர்ச்சிளை தரும்.

 • 20 – 25 வருடங்கள்.

 

சந்தை மதிப்பு :

 • தேக்கு மரம் சதுர அடி 2000 – 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

 

முக்கிய பயன்கள் :

 • தேக்கு மரம் கடினதன்மையுடையதால் மரச்சாமான்கள். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரப்பொருட்கள் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
 • தேக்கு மரம் கப்பல் கட்டுமானத்திற்கும், படகு கட்டமானத்திற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 • இது கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
 • மேலும் வயிற்றுப்போக்கு மூலம் வயிற்றுப்புண், கட்டிகள், தோல்நோய்கள், சிறுநீர் பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்தும்.

-->