பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

நாங்கு மரம்


அறிவியல் பெயர் :

மெசுவா பெர்ரா

பொதுப்பண்பு :

 • அகன்ற கிளைகளை கொண்ட பசுமை மாறா மரமாகும்.
 • மரப்பட்டை மென்மையானது மற்றும் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
 • இலைகள் இளமையில் சிவப்பு நிறமுடையது, பின் பளபளப்பான பச்சை நிறமுடையதாக மாற்றமடைகிறது.
 • மலர்கள் மணமானது மற்றும் வெண்மையானது.
 • காய்கள் வட்ட வடிவமானது, கடினமானது மற்றும் பச்சை நிறமுடையது.
 • விதைகள் சாம்பல் நிறமுடையது. விதைகளின் ஒரு பகுதி தட்டையாக இருக்கும்.

பரவல் :

 • இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளை தாயகமாக கொண்டதாகும்.

வாழிடம் :

வெப்பமண்டல ஈர பசுமை மாறா காடுகள் மற்றும் பகுதி பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

இம்மரம் நல்ல நீர் தேங்காத, ஆழமான மற்றும் வளமான மண்ணில் வளரும் தன்மையுடையது.

மண் pH :

4.3 – 6.9

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

600 மீ மேலுள்ள பகுதிகளில் வளரக்கூடியது.

மலையளவு :

500 – 2000 மி.மீ

வெப்பநிலை :

24 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மிதமான சரிவு நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • நிழலை தாங்கி வளரும் தன்மையுடையது.
 • இரண்டாம் நிலை காடுகளில் இளமையாக இருக்கும் இம்மரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 • வறட்சியை மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
 • நிழலை தாங்கி வளரும் தன்மையுடையதால் எளிதாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த காயானது டிசம்பர் - ஜனவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட காய்கள் வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட விதைகள் தரம் பிரிக்கப்படுகிறது.
 • விதைகளை 5 மாதங்கள் வரை பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்க முடியும்.
 • குறைந்த நாள் மட்டுமே விதை முளைப்புத்திறனை கொண்டிருக்கும்.
 • ஒரு கிலோ விதையில் 450 - 1200 விதைகளிருக்கும்.
 • விதை முளைப்புத்திறன் 55 – 95 சதிவிகிதமாகும்.
 • நாற்று உற்பத்தி திறன் 46 – 70 சதவிகிதமாகும்.

 • குளிர் நீரில் 24 மணிநேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

 • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
 • தாய்பாத்தியை களைகளின்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
 • 2 மாத முடிவில் அனைத்து விதைகளும் முளைத்து விடுகிறது.
 • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நேரடி விதைப்பு :

 • விதைகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் நேரடியாக நிலத்திலேயே விதைக்கப்படுகிறது.

நாற்றுகள் நடவு முறை :

 • 1 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • இரண்டாம் பருவ மழை காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 1.8 x 1.8 மீ என இருக்க வேண்டும்.

 • அவ்வப்போது களைகளை நீக்க வேண்டும். நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
 • மரங்கள் நன்கு வளர மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க வேண்டும். மரங்கள் வளர வளர அருகிலுள்ள மரங்களை வெட்டி பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.

 • 18 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர் சாகுபடி :

நடவு செய்த ஆரம்ப ஆண்டுகளில் துவரையை ஊடுபயிராக நட்டு கன்றுகளுக்கு நிழல் தர வேண்டும்.

முக்கிய பயன்கள் :

 • இதன் மரம் ஓரளவு உறுதியானது மற்றும் பூச்சி மற்றும் கரையான் தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையது.
 • இம்மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்காகவும், உள் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 • இது இரத்தசோகையைப் போக்கவும், வியர்வையை தூண்டவும், தோல் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

-->