பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

வெக்காளி மரம்


அறிவியல் பெயர் :

அனோஜிசிஸ் லாட்டிபோலியா

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய பெரிய இலையுதிர் மரம்.
 • மரப்பட்டையானது மென்மையானது மற்றும் வெளிர் சாம்பல் நிறமுடையது.
 • இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். பெரியது மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
 • காயானது டுரூப் வகையை சேர்ந்தது. ஆப்பு வடைவமான இதன் காய் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்டது. தென் கிழக்கு தமிழகத்தில் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. செம்பொறை மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

மண் pH :

4.3 – 8.0

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

625 – 2250 மி.மீ

வெப்பநிலை :

38 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி, பாறைகள் நிறைந்த பகுதி மற்றும் மிதமான சரிவு நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
 • மறுதாம்பு முறை மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

 • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாகவும் மற்றும் மறுதாம்பு மூலமாகவும் இனப்பெருக்கமடையக்கூடியது.

 

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த காயானது டிசம்பர் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • காயானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையில் 1 இலட்சம் விதைகளிருக்கும்.
 • விதைகள் 8 மாதங்கள் வரை முளைப்புத்திறன் கொண்டிருக்கும்.
 • விதை முளைப்புத்திறன் 0.5 – 5 சதிவிகிதமாகும்.

 • குளிர் நீரில் 48 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.

 • விதைகள் தாய்பாத்தியில் துவுதல் முறையில் விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மேஜுன் மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
 • விதைக்கப்பட்ட பின் தாய்பாத்தியானது நெல் வைக்கோல் கொண்டு மூடப்படுகிறது.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
 • இரண்டு இலைகள் துளிர் விட்ட பின் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளிகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

 • குறிப்பிட்ட இடைவெளியில் களையெடுத்தல் மற்றும் மண் மேம்பாட்டு பணிகள் செய்வது அவசியமாகும்.

 • 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

 • ஒரு டன் மரம் 3700 – 4000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

 

முக்கிய பயன்கள் :

 

 • இதன் மரம் மரச்சாமான்கள் தயாரிக்க பயன்படுகிறது. வேளாண் உபகரணங்கள் தயாரிக்க மற்றும் வீடுகட்டுமான பணிகளுக்கும் பயன்படுகிறது.

 

தீவனம்:

 • டஸார் பட்டுபுழு வளர்ப்பிற்கு இலைகள் தீவனமாக அளிக்கப்படுகிறது.
 • கால்நடைகளுக்கு தீவனமாகவும் வழங்கப்படுகிறது.

எரிபொருள்:

 • சிறந்த எரிபொருன் 17,600 – 20,500 கிலோ ஜீல்.
 • சிறந்த கரியினை தரவல்லது.

-->