பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

கடம்பா


அறிவியல் பெயர் :

நியோலமார்கியா கடம்பா

பொதுப்பண்பு :

 • அகன்ற அடிப்பகுதியை கொண்ட நேரான பெரிய இலையுதிர் மரமாகும்.
 • இம்மரத்தின் அடிப்பகுதி மடிப்புமடிப்பாக காணப்படும்.
 • இலைகள் தனித்தனியானது மற்றும் பூக்களானது சிறியது மற்றும் ஆரஞ்சு நிறமாக காணப்படும்

பரவல் :

 • இம்மரம் வெப்பமண்டல இந்திய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

வாழிடம் :

இம்மரம் வெப்பமண்டல பசுமைமாறா காடுகளிலும் மற்றும் பகுதி பசுமைமாறா காடுகளிலும் அதிகம் வளர்கிறது.

மண் :

கடம்ப மரம் ஆழமான மற்றும் ஈர தன்மை கொண்ட செம்மண்ணிலும், வண்டல் மண்ணிலும் நன்நாக வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1300 மீ உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.

மலையளவு :

1500 - 5000 மி.மீ

வெப்பநிலை :

47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரம்
 • மறுதாம்புகள் நன்கு தழைத்து வளரும் தனமை கொண்டது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

 • ஓளி, நிழல் மற்றும் வளமான மண் போன்ற சாதகமான சூழல் இருப்பின் நன்றாக வளரும் தன்மை கொண்டது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

 • முதிர்ந்து கீழே விழுந்த விதைகள் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட விதைகள் சூரிய வெயிலில் உலர்த்தப்படப்படுகிறது.
 • இதன் விதையுறையானது தண்ணீர் கொண்டு நீக்கப்படுகிறது.
 • முறையாக காய வைக்கப்பட்ட விதைகள் உலர்ந்த இடத்தில் சேகரிக்கப்படுகிறது.

 

விதை நேர்த்தி:

 

 • தேவையில்லை 

 

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

 

 • நல்ல ஆற்று மணல் நிரப்பப்பட்ட மர தட்டுகளில் 0.1 கி அளவுள்ள விதைகள் விதைக்கப்படுகின்றன.
 • விதையானது சுத்திகரிக்கப்பட்ட ஆற்று மணல் சேர்த்து விதைக்கப்படுகிறது.
 • பிப்ரவரி மாதத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 0.2 கி விதைகள் என நாற்றங்காலில் விதைக்கப்படுகிறது.
 • விதை முளைப்புத்திறன் அதிகமாகும்.
 • விதைப்பதற்கு முன் தாய்பாத்தியை தண்ணீர் கொண்டு நன்கு  ஈரப்படுத்த வேண்டும்.
 • விதைகள் துவுதல் முறை மூலம் விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு தாய்பாத்தி தண்ணீர் இறைக்கப்படுகிறது. பின் வைக்கோல் கொண்டு தாய்பாத்திளை மூட வேண்டும்
 • விதைக்கப்பட்டதிலிருந்து 3 வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
 • முளைக்க துவங்கியவுடன் வைக்கோல் நீக்கப்படுகிறது.
 • விதை முளைப்புதிறன் 60 – 90 சதவிகிதம் ஆகும்.
 • 5 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது. மறுநடவு செய்யப்பட்வுடன் நிழல் அவசியமாகும்.
 • வெப்பமண்டல பகுதிகளில் இதன் வளர்ச்சி மிக அதிகமாகும்.

 

 • Fruits are collected from the ground and heaped under shade and allowed to rot for 3-4 days.
 • Pulp is washed off by hand in a bucket of water.
 • Seeds sink to the bottom and are separated and dried.
 • Properly dried seeds are stored in a dry place for about a year.
 • Pre sowing treatment is not required.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • மழை அதிகம் பெய்யும் இடங்களில் மரத்திற்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
 • அதிக சுற்றளவு கொண்ட மரம் தேவைப்படுமேயானால் மரங்களுக்கிடையேயான இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும்.

வேளாண்காடுகள் :

 • அதிக மகசூல் கிடைக்க வேண்டுமெனில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
 • மரம் வளர்ந்த பின் வேளாண் பயிர்களையும் மாற்றி பயிரிட முடியும். இஞ்சி, மஞ்சள் போன்ற வேளாண் பயிர்களும், அன்னாச்சி மற்றும் பருப்பு வகைகளும் பயிரிடலாம்.
 • இம்மரம் விவசாய நிலங்களின் வரப்போரங்களில் நட பயன்படுகிறது.

 

 • களைகளை நீக்குதல் மற்றும் பக்க கிளைகளை நீக்குதல் போன்ற பணிகளை ஒரு குறிபிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

 • 6 - 7 வருடங்கள்

சந்தை மதிப்பு :

 • ஒரு டன் மரம் 4000 – 5000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

 

 • இதன் மரம் ஒட்டுப்பலகைகள் தயாரிக்கவும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது.
 • தீக்குச்சி மற்றும் பென்சில் தயாரிக்க பயன்படுகிறது.
 • இதன் மரம் உள் கட்டுமான பணிகளுக்கு மற்றும் பெட்டிகள் தயாரிக்கவும் மற்றும் சிற்பங்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.

 

தீவனம்:

 

 • இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
 • உணவு:

  • பூக்கள் à®®à®±à¯à®±à¯à®®à¯ à®ªà®´à®™à¯à®•à®³à¯ à®‰à®£à¯à®£à®•à¯à®•à¯‚டியவை.

  தீவனம்:

  • இலைகள் à®®à®¾à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ à®¤à¯€à®µà®©à®®à®¾à®• à®…ளிக்கலாம்.

 

 

-->