பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

இலுப்பை மரம்


அறிவியல் பெயர் :

பேசியா லேட்டிபோலியா

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
 • மரப்பட்டையானது சாம்பல் அல்லது கருப்பு நிறமுடையது.
 • இலைகள் குழுமமாக அமைந்திருக்கும்.
 • பூக்கள் குழுமமாக அமைந்திருக்கும் மற்றும் வெண்மையானது.
 • காய்கள் பெர்ரி வகையை சேர்ந்தது. காய் பழுத்த பின் பச்சை நிறமாக மாற்றமடைகிறது.
 • விதைகள் பெரியது மற்றும் முதிர்ந்த பின் பளபளப்பான சாம்பல் நிறமுடையது

பரவல் :

 • இந்தியாவை தாயகமாக கொண்ட மரம்.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1300 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 2500 மி.மீ

வெப்பநிலை :

20 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த காயானது ஜுலை மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • காய்கள் பழுத்து விழுந்தபின்னரோ அல்லது பழுத்தபின் உழுக்குதல் மூலமோ சேகரிக்கப்படுகிறது.
 • காய்களிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
 • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் அதிக முளைப்புத்திறன் கொண்டதாக இருக்கும்.
 • இதன் சராசரி விதை முளைப்புத்திறன் 35 சதவிகிதமாகும்.
 • ஒரு கிலோ விதையில் 420 - 670 விதைகளிருக்கும்.

 • தேவையில்லை.

 • விதைகள் நேரடியாக பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது. பாலித்தீன் பைகளில் வளர் இடுபொருட்களான செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய கலவை 1:1:1 அல்லது 2:1:1 என்ற விகிதத்தில் நிரப்பப்படுகிறது.
 • அதிக களிமண் இல்லாதவாறு வளர் இடுபொருட்களை நிறப்ப வேண்டும்.
 • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பையில் 2 விதைகள் என நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் நாற்றங்காலிலிருந்து வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • ஈரமான பகுதிகளுக்கு குழியின் அளவு 30 செ.மீ3 மற்றும் வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  6 – 12 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேம்பாடு:

 • என் பி கே – 0.05 – 0.10கி/செடிமுதல் வருடம். முதல் 10 வருடங்களுக்கு களை எடுத்தல் அவசியம்.

 • 50 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

 • இதன் காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது.
 • காய் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.