பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

சப்போட்டா


அறிவியல் பெயர் :

மணில்காரா சப்போட்டா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
  • மரப்பட்டையானது அடர் சாம்பல் நிறமுடையது. 
  • இலைகள் சுருள் வடிவில் அமைந்திருக்கும் மற்றும் கொத்தாக அமைந்திருக்கும்.
  • பூக்கள் பச்சை நிறமுடையது.
  • காயானது வட்டமானது மற்றும் பெர்ரி வகையை சேர்ந்தது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

வெப்ப மண்டல மற்றும் மித வெப்பமண்டல காடுகளில் வளரும் தன்மை கொண்டது.

மண் :

நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண் மற்றும் கார தன்மை கொண்ட மண்ணிலும் அதிகமாக வளரும்.

மண் pH :

5.5-8.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1250 – 2500 மி.மீ

வெப்பநிலை :

30 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • ஒட்டு முறை, கட்டுசெடி வளர்ப்பு மற்றும் மற்ற உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.