பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

ஜாதிக்காய்


அறிவியல் பெயர் :

மிர்ஸ்டிகா பிராகரென்ஸ்

பொதுப்பண்பு :

 • இது ஒரு மணம் கமலக்கூடிய மரமாகும்.
 • இலைகள் அடுத்தடுத்து அமைந்தது.
 • மலர்கள் மணி போன்றது. வெளிர் மஞ்சள் நிறமுடையது.
 • காய்கள் நீள்வட்ட வடிவமுடையது மற்றும் மஞ்சள் நிறமுடையது.
 • இதன் உள் மரமானது இளஞ்சிவப்பு நிறமுடையது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

வாழிடம் :

வெப்பமண்டல காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

மண் pH :

6.5 - 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

4500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

2000 – 3500 மி.மீ

வெப்பநிலை :

25 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

 • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

 • ஒட்டுசெடி நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த நெற்றானது ஜுன் - ஜுலை மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • ஒரு காயில் 30 கிராம் விதைகள் வரையிருக்கும்.

 • தேவையில்லை.

நாற்றங்கால் நாற்று உற்பத்தி

 • காய்கள் ஜுன் - ஜுலை கால இடைவெளியில் அறுவடை செய்யப்படுகிறது.
 • விதைகள் தனியே பிரித்தெடுக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது.
 • காயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் உடனடியாக தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
 • விதைக்கப்பட்ட 40 நாளில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
 • 35 x 15 அளவுள்ள பாலித்தீன் பைகளில் இரண்டு இலைகள் துளிர்ந்த நாற்றுகள் மறுநடவு செய்யப்படுகிறது.
 • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்காக பயன்படுத்தப்படுகிறது.

உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று உற்பத்தி :

 • ஒட்டு நாற்று உற்பத்தி மூலமும், பக்க மொட்டுகள் மூலமும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • இம்முறையான நாற்று உற்பத்திக்கு அக்டோபர் - ஜனவரி கால இடைவெளி சிறந்ததாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • 12 – 18 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • 60 x 60 x 60 செ.மீ அளவுள்ள குழி பயன்படுத்தப்படுகிறது. குழியினுள் மலைமண் மற்றும் எரு சேர்ந்த கலவை பரிந்துரைக்கப்பட்ட அளவு இடப்படுகிறது.
 • பொதுவாக 8 x 8 மீ இடைவெளி நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • ஜுன் - டிசம்பர் மாத கால இடைவெளியில் நாற்று நடவு செய்யப்படுகிறது.

 • அதிக நீர்பாய்ச்சப்படும் மரங்கள் அதிகளவில் மகசூலை தரவல்லது.
 • பருவ நிலை பொருத்தும், மண்ணின் ஈரப்பதம் பொருத்தும் நீர் பாய்ச்சுவதை மேற்கொள்ள வேண்டும்.

 • 15 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர் சாகுபடி :

 • ஆரம்ப காலத்தில் காய்கறி;களை ஊடுபயிராக பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

 • கொட்டையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
 • இது மருத்துவ குணம் வாய்ந்தது.
 • கொட்டை மருந்தாகவும் பழம் உணவாகவும் பயன்படுகிறது.