பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

கும்பதிரை


அறிவியல் பெயர் :

ஸ்கிளிச்சரா ஒலியோசா

பொதுப்பண்பு :

 • இம்மரம் அரக்கு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • சராசரி அளவுயை பெரிய இலையுதிர் மரமாகும்.
 • இதன் இலைகள் ஒன்றையொன்று ஒட்டிக்காணப்பம் மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
 • சிறிய மஞ்சள் கலந்த பச்சை நிறமுடைய பூக்களை கொண்டது.
 • காயானது கடியமானது. ஒவ்வொரு காயிலும் 1 – 2 சாம்பல் நிற விதைகளை கொண்டது.

பரவல் :

 • தென்னிந்தியாவில் இம்மரம் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

மணற்பாங்கான வண்டல் மண் மற்றும் மணற்கலந்த மண்ணில் நன்கு வளரும்.

மண் pH :

5.5 - 7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1200 – 2300 மி.மீ

வெப்பநிலை :

30 - 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • பனி மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த காயானது ஜுலைஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட காயானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
 • உலர்த்தப்பட்ட காய்கள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையில் 1500 - 2200 விதைகளிருக்கும்.
 • விதை முளைப்புத்திறன் 80 – 90 சதிவிகிதமாகும்.

 • தேவையில்லை

 • விதைகள் தாய்பாத்தியில் மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
 • விதைகள் விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் முளைக்க துவங்குகிறது. ஒரு மாத முடிவில் முற்றிலும் முளைத்துவிடுகின்றது.
 • தாய்பாத்தியானது தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
 • 3 – 4 மாதமான நாற்றுகள் நடவிற்காக பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 

நேரடி விதைப்பு :

 

 • பண்ணையானது முழுமையாக உழப்படுகிறது.
 • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளானது பருவ மழை சமயத்தில் விதைக்கப்படுகிறது.
 • விதைகள் 3 மீ வரிசை இடைவெளியில் 3 x 3 மீட்டர் நாற்று இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
 • விதைகளானது மண் கொண்டு மூடப்படுகிறது.

 

தண்டு உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று நடவு :

 

 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • 23 செ.மீ நீளமுடைய தண்டு மற்றும் 5 செ.மீ நீளமுடைய வேர் அடங்கிய நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

 

 • நடப்பட்டதிலிருந்து அவ்வப்போது களையெடுத்தல் அவசியமாகும்.

 • 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

 • ஒரு கிலோ அரக்கு 1500 – 2000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

 • இதன் மரம் விறகிற்காக எண்ணெய், சர்க்கரை மற்றும் அரிசி ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
 • வேளாண் உபகரணங்கள் செய்யவும் மற்றும் கோடாரி கைபிடிகள் தயாரிக்க பயன்படுகிறது.
 • இம்மரம் விறகிற்காகவும் மற்றும் கரி தயாரிக்கவும் பயன்படுகிறது.
 • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
 • இம்மரம் அரக்கு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குஸ்மி என்னும் அரக்கு இம்மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.