பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

சுபாபுல்


அறிவியல் பெயர் :

லியுசியானா லுக்கோசெபாலா

பொதுப்பண்பு :

 • 20 மீ உயரம் வரை வளரக்கூடிய சிறிய பசுமைமாறா மரமாகும்.
 • மரம் மென்மையானது மற்றும் சாம்பல் நிறமுடையது.
 • பூக்கள் சிறியது மற்றும் வெண்மையானது.
 • நெற்றானது சாம்பல் நிறமுடையது மற்றும் அதிக எண்ணிக்கையிலான விதைகளை கொண்டது.

பரவல் :

 • இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். வேப்பமண்டல பகுதிகளில் நன்கு வளர்கிறது.

வாழிடம் :

வெப்பமண்டல காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.

மண் :

நல்ல வளமான, ஈரப்பதமுடைய மண்ணில் வளரும் தன்மை கொண்டது.

மண் pH :

8 வரை

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

650 – 3000 மி.மீ

வெப்பநிலை :

25 -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • வேகமாக வளரும் தன்மை கொண்டது.
 • வறட்சியையும், பனியையும் தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • விதையின் மூலம் இயற்கையாக இனப்பெருக்கம் அடையக்கூடியது.

 

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

 • விதையானது பிப்ரவரி – மே மற்றும் ஜுலை – நவம்பர் ஆகிய இரு பருவங்களில் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
 • முற்றிய நெற்றுகள் வெடித்து விதைகள் உதிரும் முன் நெற்றுகள் சேகரிக்கப்படுகிறது.
 • சூரிய வெயிலில் நெற்றுகள் 3 – 4 நாட்கள் உலர்த்தப்படப்படுகிறது.
 • முறையாக சேகரிக்கப்பட்ட விதைகளை 8 10 மாதங்கள் வரை சேமித்து பின் விதைக்கலாம்.
 • ஒரு கிலோ விதையில் 20000 விதைகள் இருக்கும்.
 • ஓவ்வொரு நெற்றும் 15 – 20 வதைகளை கொண்டிருக்கும்.

 

 • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 2 முதல் 3 நிமிடம் அல்லது குளிர் நீரில் 24 - 48 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

 • விதையானது நேரடியாக வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • 3 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • தீவனத்திற்காக நடப்படும் நாற்றுக்கிடையேயான இடைவெளியானது 1 x 1 மீ ஆகும்.
 • விறகிற்காக நடப்படும் நாற்றுக்கிடையேயான இடைவெளியானது 1 x 1 மீ ஆகும்.
 • மரக்கூலுக்காக நடப்படும் நாற்றுக்கிடையேயான இடைவெளியானது 3 x 1.5 மீ ஆகும்.
 • வரப்போரங்களில் நடப்படும் நாற்றுகளுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தாலே போதுமானது.

 • மரங்கள் 1 – 2 மீ உயரம் வளரும் வரை குறிபிட்ட கால இடைவெளியில் களையெடுத்தல் அவசியமாகும்.
 • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது. வருடத்திந்கு மூன்று முறையாவது களையெடுக்க வேண்டும்.
 • மறுதாம்பு முறை மூலம் வளர்க்கப்படும் மரங்கள் 2 அல்லது 3 மறுதாம்பு நாற்றுகளை தவிர மற்ற அனைத்தையும் அகற்ற வேண்டும்.
 • மரங்களுக்கிடையேயான இடைவெளியை சீர்படுத்த 2 – 3 ஆண்டுகளான பண்ணையில் இடையிடையே மரங்களை நீக்க வேண்டும்.

 • மரக்கூலுக்காக வளர்க்கப்படும் மரங்கள் 10 செ.மீ அளவு அல்லது 4 வருடங்கள் வளர்ந்த பின் அறுவடை செய்யப்படுகிறது.
 • ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 40 வருடங்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்யப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

 • இம்மரம் மரக்கூழ் மற்றும் காகிதத்திற்கு அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
 • விறகிற்காகவும், கரிகளுக்காவும் இம்மரம் அதிகம் வளர்க்கப்படுகிறது.
 • இம்மரம் அலங்கார பொருட்கள் தயாரிக்கவும், கட்டுமான பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
 • இதன் இலைகள் மற்றும் நெற்றுகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.