பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

ஆயா மரம்


அறிவியல் பெயர் :

ஹோலோப்டீலியா இன்டகிரிபோலியா

பொதுப்பண்பு :

 • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
 • மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
 • இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் பச்சை நிறமுடையது.
 • மலர்கள் இருபால் தன்மையுடையது, ஓரு குழுமமாக அமைந்திருக்கும்.
 • முதிர்ந்த பின் சாம்பல் கலந்த மஞ்சள் நிறமுடையது.
 • காய்கள்  வட்டவடிவமுடையது மற்றும் ஒரே ஒரு விதையை கொண்டது.
 • விதைகள் சிறியது, வெண்மையானது மற்றும் சிறுநீரக் வடிவமுடையது.

பரவல் :

 • இந்தியா முழுவதும் வளரும் தன்மையுடையது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

நீர் தேங்காத தன்மையுள்ள ஆழமான செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5 – 8.3

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1650 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

800 – 2500 மி.மீ

வெப்பநிலை :

10 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • சாதகமான சூழ்நிலையில் விதைகள் காற்றின் மூலமாக பரவி இனப்பெருக்கமடையக்கூடியது.

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த காயானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட விதைகள் உலர்த்தப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையில் 27000 விதைகளிருக்கும்.
 • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகளில் விதை முளைப்புத்திறன் 60 சதிவிகிதமாகும்.
 • சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் அதிக முளைப்புத்திறன் கொண்டது.

 • தேவையில்லை.

 • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் மேற்கொள்வது சிறந்தது.
 • விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது. ஒரு மாத முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
 • பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
 • நாற்றுகள் வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
  3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும். குழிகளில் மேல் மண் மற்றும் 10 கிராம் எரு கொண்ட கலவை இட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

நீர் பாய்ச்சுதல் :

 • நடப்பட்டதிலிருந்து முதல் 2 வருடங்களுக்கு தேவைப்படும் சமயங்களில் நீர் இறைக்க வேண்டும்.
 • இவ்வாறு நீர் இறைக்கப்படும்பொழுது நாற்றானது தழைத்து வளரக்கூடியது.
 • மண்ணில் தேவையான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

களையெடுத்தல் :

 • நடப்பட்டதிலிருந்து முதல் 2 வருடங்களுக்கு களையெடுத்தல் அவசியமாகும்.

 • 20 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

 • இதன் மரம் உள்கட்டுமான பணிகளுக்காகவும், மரச்சாமான்கள் தயாரிக்க மற்றும் சிற்ப பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
 • இம்மரம் ஒட்டுப்பலகை தயாரிப்பிற்கும், காகித தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 • இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
 • இம்மரம் பாறைபாங்கான பகுதிகளில் வளம்கூட்ட பயன்படுத்தப்படுகிறது.

 • மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள்.

-->