பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

கறிவேப்பிலை


அறிவியல் பெயர் :

முராயா கொயின்ஜி

பொதுப்பண்பு :

 • இது 4 – 6 மீ உயரம் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும்.
 • இலைகள் மணமானது மற்றும் அடர் பச்சை நிறமுடையது.
 • பூக்கள் சிறியது மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
 • இம்மரம் தன் மகரந்தச்சேர்க்கை மூலம் விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது.
 • இதன் விதைகள் அதிக முளைப்புத்திறன் கொண்டது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. எனினும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

இம்மரம் வெப்பமண்டல, மித வெப்பமண்டல மற்றும் மிதமழை பெறும் பகுதிகளில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.

மண் :

கருவேப்பிலை அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. நீர் தேங்காத களிமண் மற்றும் செம்மண் கலந்த களிமண்ணில் வளரும்.

மண் pH :

8.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

500 - 1600 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 மி.மீ வரை பெய்யக்கூடிய இடங்களில் நன்கு வளரக்கூடியது.

வெப்பநிலை :

12 – 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
 • பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

 • மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த கனியானது ஜுலை - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • கனியை சுற்றியுள்ள சதை பகுதி நீக்கப்பட வேண்டும்.
 • ஒரு கிலோ விதையில் 1200 – 1800 விதைகளிருக்கும்.
 • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும்.
 • விதை முளைப்புத்திறன் 35 – 90 சதிவிகிதமாகும்.
 • நாற்று முளைப்புத்திறன் 56 – 96 சதவிகிதமாகும்.

 • தேவையில்லை

 • பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய விதைகள் ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
 • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 10 – 15 நாட்களில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
 • நாற்றிற்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
 • 12 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • நடவிற்கு முன் 3 – 4 முறை நிலத்தை உழ வேண்டும்.
 • நிலத்திற்கு எரு இட்டு உழுவது நாற்று நன்கு வளர துணைபுரியும். ஹெக்டருக்கு 20 டன் எரு பரிந்துரைக்கப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
 • இடைவெளியானது 1.5 x 1.5 மீ என இருக்க வேண்டும்.

 • நடப்பட்டவுடன் நாற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
 • நடப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் இரண்டாம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
 • வயலை களைகளற்றதாக பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

 • வருடம் முழுவதும் இலைகளை தரவல்லது.

சந்தை மதிப்பு :

 • தேராயமாக ஒரு டன் இலை 10000 – 12000 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

 

 • இதன் இலைகள் சமையலுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

 

தீவனம்:

 • இலைகள் மனிதனுக்கு உணவாகவும், கிளைகள் ஒட்டகம் (à®®) கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது.

தேனீ வளர்ப்பு:

 • மரவளர்ப்பு, மறுதாம்பு, வெட்டுத்துண்டு, மலர்விடுதல், ஆகியவை வருடாந்திர நிகழ்வாகும்.
 • இவை தேனீக்களுக்கு நீண்ட காலத்திற்கு தேனை அளிக்கும்.

-->