பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

கருங்காலி


அறிவியல் பெயர் :

அகேசியா கேட்டச்சு

பொதுப்பண்பு :

 • கருங்காலி மரம் சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
 • ஒருங்கமைந்த இலைகளை கொண்டது. 30 – 50 சோடி இலைகள் ஒன்றினைந்து கொத்தாக காணப்படும்.
 • பூக்கள் வெண்மையானது.
 • நெற்றானது 10 15 செ.மீ நீளமுடையது மற்றும் 2 – 3 செ.மீ அகன்றது. தட்டையானது மற்றும் முற்றியபின் அடர் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

 • இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் (அதிக குளிர் மற்றும் குளிர் பிரதேசங்கள் தவிர).

வாழிடம் :

கலப்பு இலையுதிர் காடுகளிலும், வனாந்திர மலை அடிவாரங்களிலும் பரவலாக காணப்படும். மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் காணப்படும்.

மண் :

வண்டல் மண் கலந்த மணல், மணற்பாங்கான மண், கரிசல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

மண் pH :

6 மற்றும் 7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

900 – 1200 மீ உயரம் வரை வளரும்.

மலையளவு :

500 – 2000மி.மீ

வெப்பநிலை :

37 – 43 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரும்.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதி ஆகியவற்றில் நன்கு வளரும்.

மரப்பண்பு :

 • அதிக ஒளியை விரும்பும் மரமாகும். 
 • நிழலை தாங்கி வளரும் தன்மையற்றது.
 • பனியை தாங்கி வளரக் கூடியது. 
 • மிதமான தீயை தாங்கி வளரக் கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • இயற்கை முறையில் பெருக்கமடையக்கூடிய வீதம் சில காரணங்களால் சற்று குறைவாகவே இருக்கும்.
 • நன்கு வளர்ச்சியடைந்த மரங்களில் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
 • தகுந்த சூழ்நிலைகளிருப்பின் விதைகள் மூலம் பெருக்கமடையும் தன்மையுடையது.

 • இது ஒரு எளிதான சிறந்த முறையாகும்.
 • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • இம்மரம் இளம் வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் வளமான விதையை தரக்கூடியது. 
 • நெற்றானது நவம்பர் முதல் பிப்ரவரி மாத கால இடைவெளியில் முதிர்ச்சியடைகிறது.
 • முதிர்ந்த நெற்று சேகரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது.
 • விதைகள் மரத்திலிருக்கும் பொழுது பூச்சிகளின் பாதிப்பு இருப்பதில்லை. எனவே விதைகள் மரத்திலிருக்கும் பொழுதே சேகரித்துக்கொள்ள வேண்டும்.
 • உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்து எடுக்க வேண்டும்.
 • நன்கு சுத்தம் செய்யப்பட்ட விதைகளை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைக்கப்படுகிறது. 6-8 மாதங்கள் வரை விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் சேமிக்கலாம்.
 • 1 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 5 – 17 சதவிகிதமிருக்கும். 2 வருடம் வரை சேமித்து வைக்கப்படும் பொழுது விதை முளைப்புத்திறன் 9 சதவிகிதமிருக்கும்.
 • ஒவ்வொரு வருடமும் புதிய விதைகளை வழங்கவல்லது.
 • ஒரு கிலே எடையில் 4590 நெற்றுகளிருக்கும்.
 • ஒரு கிலே எடையில் 40000 விதைகளிருக்கும்.
 • ஒவ்வொரு தனி மரமும் 0.5 – 2 கிலோ விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது.

 • விதைப்பதற்கு முன் சல்பியூரிக் அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.
 • கொதித்து ஆறிய நீரில் 6 மணி நேரம் அல்லது குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவைத்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கலாம்.

நாற்றாங்கால் படுக்கை:

 • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படவேண்டும்.
 • பிப்ரவரி மற்றும் மார்ச் மாதகால இடைவெளியில் விதைப்பு செய்வது சிறந்ததாகும்.
 • விதைகளானது 20 செ.மீ இடைவெளியில் விதைக்கப்படவேண்டும். ஒவ்வொரு வரிசைகளுக்கிடையேயான இடைவெளி 2 செ.மீ என இருக்க வேண்டும்.
 • 0.5 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.
 • விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு தாய்பாத்திக்கு நீர் இறைக்க வேண்டும்.
 • 5 – 7 நாட்களில் விதைகள் முளைக்கதுவங்குகிறது.
 • மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த பிறகு 10 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.

பாலித்தீன் பை மரக்கன்று:

 • 22 x 9 செ.மீ அல்லது 23 x 13 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • பாலித்தீன் பையில் 3:1 விகிதத்தில் மண் மற்றும் மக்கிய சாணத்தை கலந்து கலவையை  நிறப்ப வேண்டும். 
 • விதைகளை 1.5 செ.மீ ஆழத்தில் விதைப்பது அவசியமாகும்.
 • விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது. 3 வார முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
 • விதை முளைப்புத்திறன் 70 – 80 சதவிகிதமாகும்.
 • விதைகள் விதைககப்பட்ட பாலித்தீன் பைக்கு பூவாளி கொண்டு நீர் இறைப்பது அவசியமாகும்.
 • நைட்ரோஜீனஸ் உரம் பைக்கு 2 கிராம் வீதம் மேஜுன்கால இடைவெளியில் 4 முறை இட வேண்டும்.
 • 50 – 60 செ.மீ உயரம் வளர்ந்த அல்லது 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜுலை மாத காலத்தில் நாற்றுகள் நடப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 

பாலித்தீன் பை கன்று:

 

 • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
 • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
 • நாற்றுகள் நடப்படுவதற்கு முன் குழிகளுக்கு நீர் இறைக்க வேண்டும்.

 

கர்னைகள் நடவு:

 

 • 12-15 மாத வயதுடைய மரத்தில் இருந்து நாற்று குச்சி பெறப்படுகிறது.
 • 10 மி.மீ சுற்றளவு கொண்ட குச்சிகள் இம்முறை நடவு செய்யப்படுகிறது.
 • பருவ மழை நின்றவுடன் இம்முறையில் நாற்றகள் உற்பத்தி செய்ய வேண்டும்

 

பசுந்தீவன நடவு:

 

 • இம்முறை நடவிற்கு 5 x 5மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது.

 

 

 • 4 - 5 வருடங்கள் வரை கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும்.

 

களையெடுத்தல் :

 

 • நடப்பட்ட பண்ணையில் ஆகஸ்டுசெப்டம்பர் மாதகால இடைவெளியில் களையெடுத்தல் வேண்டும்.
 • முதல் வருடம்                         - மூன்று முறை
 • இரண்டாம் வருடம்             - இரண்டும முறை

 

பக்க கிளைகளை நீக்குதல்:

 

 • 5 வருடமான மரத்திற்கு பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
 • அதன் பின் 10, 15, 20 மற்றும் 25ம் வருடங்களில் பக்க கிளைகளை நீக்க வேண்டும்

 

சந்தை மதிப்பு :

 • இதன் ஒரு டன் மரம் தோராயமாக 3000 – 5000 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

பயன்பாடுகள்:

 

 • இம்மரத்திலிருந்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ம மருந்து பெறப்படுகிறது.
 • அடர் கருங்காலி சாயம் பருத்தி மற்றும் பட்டு ஆடைகளுக்கு வண்ணமூட்ட பயன்படுகிறது.
 • அச்சு மை தயாரிக்கவும் பயன்படுகிறது.

 

பசுந்தாழ் தீவனம் :

 

 • இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

 

கோந்து :

 

 • இம்மரத்தின் தரமான கோந்தை தரவல்லது.

 

மரம் :

 

 • இதன் மரம் கடினமானது மற்றும் எளிதில் அறுபடும் தன்மையற்றது. எனவே இம்மரம் வேளாண் உபகரணங்கள், வீட்டு தூண்கள், எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆலைகளின் மர உபயோகப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இம்மரம் படகு மற்றும் சக்கரம் தயாரிக்க பயன்படுகிறது.

 

ஒட்டுப்பலகை தயாரிக்க :

 

 • கோந்து எடுக்க வெட்டப்பட்ட இதன் மரத்துண்டுகளை கொண்டு ஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்படுகிறது.

 

எரிபொருள் :

 • இம்மரம் 5200 கிலோ கலோரி என்றளவு வெப்பத்தை தரவல்லது. மேலும் இம்மரம் தரமான கரி தயாரிக்க பயன்படுகிறது.

 

 

மரக்கட்டை:

 

மிக கடினமாகவும், அறுப்பதற்கும் கடினமாக இருக்கும். 

 

இவை வேளாண் உபகரணங்கள், கருவிகள், கைப்பிடி தயாரிக்கப்படுகிறது.

 

விறகு கட்டை:

 

கலோரி அளவு – 5200கி.கலோரி/கி.கி. 

 

-->