பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

புன்னை


அறிவியல் பெயர் :

கேலோபில்லம் இனோபில்லம்

பொதுப்பண்பு :

 • 15 மீ உயரம் வரை வளரக்கூடிய சராசரி அளவுடைய பசுமை மாறா மரமாகும்.
 • பூக்கள் வெள்ளை நிறமானது.
 • காய வைக்கப்பட்ட விதைகள் சாம்பல் கலந்த கருப்பு நிறமுடையது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிகம் வளரும் தன்மையுடையது.

வாழிடம் :

தமிழகத்தின் பசுமை மாறா காடுகளில் பரவலாக காணப்படுகிறது.

மண் :

மணற்காங்கான இடங்களில் நல்ல நீhதேங்காத மண்ணில் வளரும். கடற்கரை பகுதிகளிலும், களிமண் பகுதிகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. சரளை மண்ணிலும் நன்கு வளரும்.

மண் pH :

5.5 - 7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ உயரம் வரை வளரும்

மலையளவு :

700 – 1000 மி.மீ

வெப்பநிலை :

18 - 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • நிழலை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமைமாறாக் காடுகள்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • விதைகள் மூலமும் மறுதாம்பு மூலமும் நன்கு வளரும் தன்மை கொண்டது.

 

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

 • விதையானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • காயானது முற்றி மஞ்சள் நிறமுடையதாக மாறிய பின் சேகரிக்கப்படுகிறது.
 • விதையுறையானது நீக்கப்பட்டு பின் நாற்றங்காலில் விதைக்கப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையில் 140 - 180 விதைகள் இருக்கும்.
 • விதை முளைப்புத்திறன் 60 - 89 சதவிகிதம் ஆகும்.
 • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்.
 • விதைகளை நல்ல காற்றோட்டமுடைய அறையில் பாலத்தீன் பையில் சேகரிக்கப்படுகிறது.

 

 • தேவையில்லை 

 • 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.
 • தினமும் நாற்றுகளுக்கு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
 • நாற்று நடவிற்கு முன் படிப்படியாக நாற்றங்காலில் இருந்து சாதாரண பகுதிகளுக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
 • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 4 x 4 மீ என இருக்க வேண்டும்.
 • நடப்பட்டதிலிலுந்து 2 வருடங்கள் வரை நீர்பாய்ச்சுவது அவசியமாகும்.

 • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
 • நடப்பட்டு 3 மாதங்களான நாற்றிற்கு 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு மற்றும் 500 கிராம் எரு ந்த கலவையிட வேண்டும்.
 • ஒரு வருடம் வரை நாற்றிற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உரமிட வேண்டும்.
 • கரையான் பாதிப்பு அதிகமிருப்பின் 500 மி.லி குளோரோ பைரோபாஸ் என்ற கரையான் கொல்லியை பயன்படுத்தலாம்.
 • இரண்டு வுருடங்களான பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க மரங்களை நீக்க வேண்டும்.

 • 4 - 5 வருடங்கள்

சந்தை மதிப்பு :

 • இதன் எண்ணெய் லிட்டர் 40 – 50 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.
 • இதன் பிண்ணாக்கு கிலோ 20 – 25 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 •  

முக்கிய பயன்கள் :

 • இதன் எண்ணெய்காக இம்மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது.
 • சவுக்கு மரத்திற்கு மாற்றாக இம்மரம் கடற்கரை பகுதிகளில் காற்று தடுப்பானாக பயிரிடப்படுகிறது. மண் அரிமானத்தை தடுக்கவும் இம்மரம் பயரிடப்படுகிறது.
 • வேளாண்காடுகளில் இம்மரம் அதிகம் பயரிடப்படுகிறது.
 • இம்மர விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உயிர் எரிகொருளாக பயன்படுத்தப்படுகிறது.
 • எண்ணெய் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 • புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்கு எதிர்ப்பு மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
 • இதன் மரம் தெற்கத்திய நாடுகளில் மரச்சாமான்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
 • மரம் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும், சிற்பங்கள் செய்யவும், படகு தயாரிக்கவும் மற்றும் உள் கட்டுமான பணிகளுக்காகவும் பயன்படுகிறது.      

டானின்:

 • பட்டையில் 11.9% டானின் உள்ளது. சாயம் மற்றும் மீன் வளை செய்ய பயன்படுகிறது.

-->