பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

காட்டு வேம்பு மரம்


அறிவியல் பெயர் :

மீளியா அசாடிராக்

பொதுப்பண்பு :

 • அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
 • மரப்பட்டை மென்மையானது, பச்சை கலந்த சாம்பல் நிறமுடையது. முதிர்ந்த பின் அடர் சாம்பல் நிறமுடையது.
 • இலைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மற்றும் அடர் சாம்பல் நிறமுடையது.
 • பூக்கள் வெண்மை கலந்த இளஞ்சிவப்பு நிறமுடையது.
 • காயானது வட்ட வடிவமானது. இளமையில் பச்சை நிறமுடையது, முதிர்ந்த பின் மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது.

பரவல் :

 • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இந்தியா முழுதும் பரவலாக பயிரிடப்படும் மரமாகும்.

வாழிடம் :

இலையுதிர் காடுகள் மற்றும் பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

ஆழமான, வளமான மற்றும் செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

6.5-7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1800 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

350 – 2000 மி.மீ

வெப்பநிலை :

23 - 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • பனி மற்றும் வறட்சியை தாங்கி வளராது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

 • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

 • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 • பழுத்த விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
 • சேகரிக்கப்பட்ட விதைகள் காய வைக்கப்பட்டு பின் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
 • ஒரு கிலோ விதையில் 3300 – 5000 விதைகளிருக்கும்.
 • விதைகள் விரைவில் முளைப்புத்திறனை இழந்துவிடும்.

 • தேவையில்லை.

 • விதைகள் 20 x 10 செ.மீ அல்லது 20 x 15 செ.மீ அளவுடைய பாலித்தீன் பையில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 அல்லது 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
 • இடு பொருட்களில் களிமண் அதிகமிருப்பதை தவிர்க்க வேண்டும்.
 • பெரிய விதைகள் தரம் பிரிக்கப்பட்டு பாலித்தீன் பையில் விதைக்கப்படுகிறது.
 • தரமான நாற்றுகள் தவிர மற்றவை நீக்கப்படுகிறது.
 • தரமான நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மறுநடவு செய்யப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • நாற்றுகள் ஜுலைஆகஸ்ட் மாத கால இடைவெளியில் நடப்படுகிறது. மழை பருவ காலத்தில் நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது. பனிகாலத்தில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

 

நேரடி விதைப்பு :

 

 • விதையானது நேரடியாக நடவு நிலத்திலேயே விதைக்கப்படுகிறது. நடவானது நிலத்தில் ஊண்றுதல், தூவுதல், வரிசை விதைப்பு மற்றும் குழி தோண்டி விதைகள் விதைப்பு முறையில் விதைக்கப்படுகிறது.

 

பாலித்தீன் பைகளில் நடவு :

 

 • குழியின் அளவு 30 செ.மீ3 மற்றும் 45 செ.மீ3 நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • 6 – 12 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • குழிகளில் மேல் மண், 5 கிலோ எரு மற்றும் 25 – 50 கிராம் டி.ஏ.பி கலந்த கலவை பரிந்துரைக்கப்பட்ட அளவு விதைக்கப்படுகிறது.
 • குழியானது வறட்சி காலத்தில் எந்தவொரு பூச்சி மற்றும் கரையான் பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 5 x 5 மீ மற்றும் 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

 

நடப்பட்டபின் பராமரிப்பு :

 • வறண்ட பகுதிகளில் நடப்பட்ட முதல் இரண்டு வருடங்களுக்கு நீர் பாய்ச்சுவதும், களையெடுத்தலும் அவசியமாகும்.

நீர் பாய்ச்சுதல் :

 • சிறிது சிறிதாக நீர் பாத்திரங்களை கொண்டு வறட்சி காலத்தில் நீர் இறைக்க வேண்டும்.
 • உவர் மண்ணில் கோடை காலங்களில் தண்ணீர் பாய்ச்சுவது மிக அவசியமாகும்.
 • நாற்றின் அடிப்பகுதியில் இறந்த இலைகள் கொண்டு மூடப்படுவதன் மூலம் ஈரப்பதத்தை தக்க வைத்து கொல்லலாம்.

நாற்று பராமரிப்பு :

 • நாற்றுகள் இளமையாக இருக்கும்பொழுது அதனைசுற்றி அதிக களைகள் வளர்கின்றன. நடப்பட்டபின் அவ்வப்போது களைகளை நீக்க வேண்டும்.
 • களைகளை நீக்குவதால் மண்ணின் ஈரப்பதத்தையும், நாற்றின் வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.
 • டிராக்டர் கொண்டு உழுவதனால் களைகளை கனிசமாக குறைக்கலாம்.
 • களையெடுத்தல் மண்ணை கிளரிவிட பயன்படுகிறது.
 • இயற்கையாக முளைத்த பண்ணையில் முதலாமாண்டு முடிவில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க மரங்கள் நீக்கப்படுகிறது.
 • 2 – 3 ஆண்டு முடிவில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ இடைவெளி இருக்க வேண்டும்.
 • பண்ணை காடுகளில் 5 ம் ஆண்டு முடிவில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 10 x 10 மீ இடைவெளி இருக்க வேண்டும்.

 • 12 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

 • இம்மரம் தோராயமாக 4500 – 5000 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

ஊடுபயிர் சாகுபடி :

 • மலைவேம்பு வேளாண் காடு வளர்ப்பிற்கு சிறந்த மரமாகும்.  இதில் ஊடுபயிராக நிலக்கடலை, மிளகாய், மஞ்சள், உளுந்து, பப்பாளி, வாழை, கரும்பு, போன்றவை வெற்றிகரமாக பயிரிடப்படுகின்றன.

முக்கிய பயன்கள் :

 • இதன் மரம் வேளாண் உபகரணங்கள் செய்ய பயன்படுகிறது.
 • மரச்சாமான்கள் செய்ய, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க மற்றும் இதர மரத்தினாலான பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

எரிப்பொருள்:

 • இதன் எரிதிறன் 5100 கிகலோரி/கிலோ ஆகும்.

தீவனம்:

 • இதன் இலைகளில் அதிக ஊட்டசத்துகள் உள்ளதால் தீவனமாக பயன்படுகிறது.

-->