பின்னூட்டம்
 


  அமில மண்

ஒரு மண் மண் தீர்வு pH மதிப்பு 6.7 விட குறைவாக உள்ளது

  வேளாண் காடுகள்.

காடுவளர்ப்பு) - புதிதாக ஒரு இடத்தில் காடு வளர்த்து நிலைநாட்டுதல் காடுவளர்ப்பு ஆகும்.

  ஏக்கர்

பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.ஒரு ஏர்ஸ் 2.47 சென்ட் ஆகும்.மேலும் 435.6 சதுர அடி ஒரு சென்ட் அல்லது 40.47 சதுரமீட்டர் ஒரு சென்ட் ,ஒரு ஏக்கர் 100 செண்ட் (அ) 4047 ச.மீ (அ) 43560 ச.அடி ஆகும்.ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கருக்கு சமம்.

  வண்டல்

வண்டல் ஒரு நதி அல்லது ஓடும் தண்ணீரால் செய்யப்பட்ட வைப்பு ஆகும். இது தண்ணீரில் உருவாக்கும் ஒரு வண்டல் படிவுக்கு வழிவகுக்கிறது. வண்டல் மண் விவசாய நிலங்களில் அதிகமாக

  அடிமரம்

ஒரு மரத்தின் வேரிலிருந்து உச்சி வரையுள்ள கிளைகளற்ற தண்டுப்பகுதி அடிமரம் எனப்படும்.

  மார்பக உயரம்

நிலப்பகுதிக்கு மேல் ஒரு மரத்தின் மார்பக உயரம் வரை 1.37 மீ உள்ள அளவு மார்பக உயரம் ஆகும்.

  மார்பக உயரச் சுற்றளவு

நிலப்பகுதிக்கு மேல் ஒரு மரத்தின் மார்பக உயரம் வரை 1.37 மீ உள்ள அளவு, அதன் சுற்றளவு உயரச் சுற்றளவு ஆகும்.

  ஒரே வயதுடைய மரத்தோட்டம்

காட்டில் உள்ள மரமானது ஒத்த வயதுடைய அளவு கொண்டது, இவை 20 சதவீதத்திற்கு குறைவான சுழற்சியை கொண்டது.

  கடின கட்டை

ஆஞ்சியோஸ்பெர்hம மற்றும் இலையுதிர் மரங்களின் மரக்கட்டை மிகக் கடினமாக இருக்கும்.

  அறுவடை

பெரிய மரம் அல்லது முதிர்ந்த மரத்தை வெட்டுதல் அறுவடை ஆகும். அந்த இடத்தில் புதிய மரம் உருவாகும

  கம்பு

ஒரு மரத்தின் சராசரி அளவுடைய மரத்தண்டு.

  கவாத்து செய்தல்

ஒரு மரம் நேராக வளர மரத்தின் பக்கக் கிளைகளை வெட்டுதல் கவாத்து செய்தல் எனப்படும்.

  மறு உருவாக்கம்

ஒரு மரம் இயற்கை அல்லது செயற்கை மூலமாக மறுபடியும் வளருவதே மறு உருவாக்கம் எனப்படும்.

  சுழற்சி

ஒரு மரத்தின் ஆரம்ப வளர்ச்சி காலம் முதல் அது முதிர்ந்து அறுவடை செய்யும் வரை உள்ள இடைபட்ட காலம் சுழற்சி எனப்படும்.

  செடி

நாற்றைவிட அதிக உயரமும், சிறிய மரமாகவும் மற்றும் சிறிய மரத்தண்டையும் கொண்டது.

  கலைத்தல்

மரத்தின் வளர்ச்சிக்காகவும், காட்டின் ஆரோக்கியத்திற்கும் மரத்தின் அடர்த்தி வெட்டப்பட்டு குறைக்கப்படுகிறது. இது கலைத்தல் எனப்படும்.

  மொத்த உயிரி எடை

மரம் உருவாதலின் அனைத்து பொருள்கள், மரத்தின் கூட்டம் மற்றும் கிளைகளின் மொத்த எடை ஆகும்.

  உச்சி

கிளைகள் மற்றும் இலை தழைகளை கொண்ட மரத்தின் ஒரு பகுதி உச்சி ஆகும்.

  ஹெக்டர்

ஒரு இடத்தின் அளவு 100மீ ஓ 100 மீ ஸ்ரீ10000 சதுர மீட்டருக்கு சமமாகும். 1ஹெக்டர் ஸ்ரீ 2.47 ஏக்கர்.

  கனஅளவு அதிகரிப்பு

ஒரு வருடத்திற்கு மரத்தின் கனஅளவு அல்லது காட்டின் கனஅளவின் அதிகரிப்பு அளக்கப்படுகிறது.

  பண்ணைக்காடுகள்

பண்ணைக் காடுகள் வணிக ரீதியில் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் மரங்களை வளர்ப்பதாகும்.

  விரிவாக்கக் காடுகள்

மரபு ரீதியான காடுகளிலிருந்து வெகுதொலைவில் உள்ள பகுதிகளில், மரங்கள் மட்டுமே வளரக்கூ

  கலப்புக் காடுகள்

இவ்வகைக் காடுகள் கிராமப்புறம் மற்றும் கிராமத்தின் பொது நிலங்களில் தீவனம் தரும் மரங்கள்,

  தடுப்புப் பட்டைகள்/ காற்று அரண்கள்

புயல் காற்று, சூரிய ஒளி மற்றும் பனிச் சரிவுகளுக்காக தடைகளை ஏற்படுத்துவதற்காக வரிசையாக மரங்கள

  நேரினை மரம் வளர்ப்பியல்

இம்முறையில் மிக வேகமாக வளரும் மரங்களை ஒரே நேர்க்கோட்டில் நடவு செய்து வளர்ப்பதாகும்.

  அழிந்த வனங்கள் மீட்பு

இவ்வகைக் காடுகள் முற்றிலும் அழிந்த வனப்பகுதியாகும் விரைவான கவனம் செலுத்த வேண்டியவையாகும்.

  பொழுது போக்குக் காடுகள்

இவை அழகிய மரங்கள் மற்றும் அழகிய புதர்களுடன் வளர்க்கப்படுகின்ற வனப்பகுதியாகும்.

  மக்கிய தோட்டமண்

மக்கிய இலைகள், தாவரங்களிலிருந்து உருவாகிறது. கரிமப்பொருள், மக்கிய தோட்டமண் என்றும் அழைக்கப்படுகிறது

  தாங்கும் திறன்

கடுமையான சேதம் மண்ணின் கட்டமைப்பில் ஏற்படுவதற்கு முன்னர் மண் தாங்கும் திறனை கொண்டது. தாங்கும் திறன் ஆண்டு முழுவதும் மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு டிராக்டர் உலர் மண்ணில் சேதம் ஏற்படுத்தாது ஆனால் ஈரமண்ணில் சேதத்தை ஏற்படுத்த முடியும்.

  களிமண்

கனிம பின்னத்தில் சிறிய மண் துகள்களின் விட்டம் 0.002 மி.மீ விட சிறியது.

  மண் அரிப்பு

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்முறைகளால் நில அல்லது மண் அரிப்பு ஏற்படுகிறது. முக்கிய மண் அரிப்பின் காரணங்கள், நீர் (சிற்றாறு, வடிகால், ஏரி திட்டு மண் அரிப்பு, பன் உருகுதல்) காற்று (கடும் வறட்சி, காற்று அடி). குறைந்த நில மேலாண்மைகளான அதிக மேய்ச்சல், காட்டை அழித்தல் போன்ற காரணத்தால் மண் அரிப்பு ஏற்படுகிறது.

  ஆவியாதல்

நீரின் அளவானது திரவத்திலிருந்து நீராவி வரை (வாயு) திறந்த நீர் அல்லது ஈர மண் அல்லது தாவரங்களில் இருந்து ஆவியாகிறது. அளவு மி.மீ.

  மூலப்பொருள்

பாறைகள் சிதைந்து மண்ணாக உருவாதலை மூலப்பொருள் எனப்படும். மூலப்பொருள்கள் பொதுவாக மண்ணிற்கு கீழே இருக்கும்.

  உவர் மண்

இந்த மண் போதுமான கரையும் உப்புத்தன்மையை கொண்டு தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.

  மணல்

மண்ணின் கனிம பின்னத்தின் மண் துகள்கள் 0.063 - 2.0 மி.மீ விட்டம்.

  உவர் மண்

மண்ணில் போதுமான பரிமாற்றம் செய்யத்தக்க உப்பு தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.

  மேல் மண்

இது ஒரு மேற்பரப்பில் உள்ள பகுதி மக்கிய குப்பைகளை கொண்டது, இதில் அதிக ஊட்டச்சத்துகள், விதைகள் மற்றும் பூஜ்ஜைகளை கொண்டது. இது அடர் நிறம் கொண்ட கரிமப்பொருளைக் கொண்டது.

  நீரை தேக்கிவைக்கும் திறன்

மண் அதிகப்படியான நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டது. மண் கரிமப்பொருள் நீரை தேக்கிவைக்கும் திறனை அதிகரிக்கும்.

  நீர் தேங்கிய மண்

இந்த மண் மண் அமைப்பில் ஈரமாகவும் அதிக நீர் துளைகளும் கொண்டது.

  சிதைதல்

பெரிய பொருள்கள் உடைந்து சிறிய துகள்களாக மாறும் நிகழ்வு சிதைதல் ஆகும்.

  காடுவளர்ப்பு

புதிதாக ஒரு இடத்தில் காடு வளர்த்து நிலைநாட்டுதல் காடுவளர்ப்பு ஆகும்.

  செயற்கை மறு உருவாக்கம்

நேரடி விதைத்தல், ஒட்டு துண்டுகள் மற்றும் நாற்றுகள் நடுதல் மூலமாக மரத்தை உருவாக்குதல் முறை செயற்கை மறு உருவாக்கம் ஆகும்.

  உச்சி கவசம்

மரத்தின் உச்சி பகுதியானது அடி நிலப்பரப்பை நேர்குத்து பார்வையில் மூடுகிறது. மொத்த நிலப்பரப்பின் சதவீதம் இதன் அளவாகும்.

  இயற்கை மறு உருவாக்கம்

இயற்கையான விதைத்தல், முளைத்தல் மற்றும் வேர் ஒட்டுச்செடிகள் மூலமாக இயற்கை மறு உருவாக்கம் நடைபெறுதல்.

  மறுதாம்பு

ஏற்கனவே உள்ள மரத்திலிருந்து முளைத்தல் மற்றும் வேர் ஒட்டுச்செடிகள் மறுபடியும் வளரும் முறை மறுதாம்பு எனப்படும்.

  களைகள் அகற்றுதல்

காட்டில் மரங்கள் செடியாக இருக்கும் போது களைகள் நீக்கப்படுகிறது.